மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 20 March 2019

😁😁😁சர்வதேச மகிழ்ச்சி தினம்..மார்ச் 20..🌹🌹🌹 மிகவும் மகிழ்ச்சியாக இருப்போம் 🌹🌹🌹


   மகிழ்ச்சி குறித்து ஒரு புதிய உலகளாவிய விழிப்புணர்வு நாள் - சர்வதேச மகிழ்ச்சி தினம் என்று ஒரு நாளைப் பிரகடனப்படுத்தலாம் என்ற சிந்தனையை 2011ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் சபையின் மூத்த அதிகாரிகளுக்கு எடுத்துச் சென்றார் Jayme Illien. 


    ஐக்கிய நாடுகள் சபையின் அனைத்து 193 உறுப்பு நாடுகளும் ஆதரவு வழங்க, சர்வதேச மகிழ்ச்சி தினம் என்று ஒரு நாளை அவதானிக்கலாம் என்று ஒரு புதிய உத்தியோகபூர்வ சர்வதேச ஐ. நா. தினத்தை நடைமுறைப் படுத்துவதற்கான கருத்தை ஐ. நா. வின் செயலாளர் நாயகம் பான் கி மூன் ஆதரிப்பதாக கருத்து வெளியிட்டார்.

"சர்வதேச மகிழ்ச்சி நாள்" என்று ஐ. நா. தீர்மானிக்க, Jayme Illien முன்னெடுப்பில் ஐ. நா. தீர்மானம் 66/281 எழுதப்பட்டது. இந்தத் தீர்மானம் ஐ. நா. பொதுச் சபையின் அனைத்து 193 உறுப்பு நாடுகளின் ஆதரவுடன் 2012 ஜூன் 28ம் நாள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இரவும் பகலும் சமமான நாளான மார்ச் equinox நாளை , சர்வதேச மகிழ்ச்சி நாளாகத் தேர்ந்தெடுத்தார் Jayme Illien.

     முதல் சர்வதேச மகிழ்ச்சி தினம் 2013ம் ஆண்டு மார்ச் மாதம் 20 ஆம் நாள் கொண்டாடப்பட்டது.

     2013 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு மார்ச் 20 ம் தேதியும் 193 ஐ. நா. உறுப்பினர் நாடுகள், 2 பார்வையாளர் நாடுகள் மற்றும் 11 பிரதேசங்களில் மகிழ்ச்சியின் சர்வதேச தினம் கொண்டாடப்படுகிறது.

Pages