கொடுக்குறதோ உழக்குப்பால், உதைக்கிறதோ பல்லுப்போக
நாம் அறிந்த விளக்கம் :
ஒரு உழக்குப்பால் மட்டுமே கொடுக்கும் பசு, ஆனால் அது உதைப்பதென்னவோ பல் உடையும் அளவிற்கு என்பது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
ஒரு உழக்கு என்பது கால் படி. கொஞ்சமே கூலி கொடுத்து அளவில்லாமல் வேலை வாங்கும் ஒரு கஞ்சத்தனமான எஜமானைக் குறித்து அவன் வேலையாள் சொன்னது தான் இந்த பழமொழி.