பகத் சிங் இந்தியாவின் விடுதலைப் போராட்ட வீரரும் இந்திய விடுதலை இயக்கத்தில் ஒரு முக்கிய புரட்சியாளரும் ஆவார். இக்காரணத்துக்காக இவர் சாஹீது பகத் சிங் என அழைக்கப்பட்டார் (சாஹீது என்பது மாவீரர் எனப் பொருள்படும்). இவர் இந்தியாவின் முதலாவது மாக்சியவாதி எனவும் சில வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுவதுண்டு.
இந்தியாவின் பிரித்தானிய ஆட்சிக்கெதிராகப் போராடிய குடும்பமொன்றில் பிறந்த பகத் சிங் இளம் வயதிலேயே ஐரோப்பிய புரட்சி இயக்கங்களைப் படிக்க ஆரம்பித்து பொதுவுடமைக் கொள்கைகளில் ஈர்க்கப்பட்டார். பல புரட்சி இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார். விரைவிலேயே இந்துஸ்தான் குடியரசு அமைப்பு என்ற புரட்சி அமைப்பின் தலைவர்களில் ஒருவரானார்.
63 நாட்கள் சிறைவாசத்தில் இருந்தபோது இந்தியக் கைதிகளுக்கு ஏனைய பிரித்தானியக் கைதிகளுடன் சம உரிமை பெறுவதற்காக உண்ணாநோன்பு இருந்ததில் இவரது செல்வாக்கு மக்களிடையே அதிகரித்தது. முதுபெரும் காங்கிரஸ் தலைவர் லாலா லஜபத் ராய் என்பவரின் இறப்புக்குக் காரணமாயிருந்த காவலதி காரியைச் சுட்டுக்கொன்ற குற்றத்திற்காக பகத் சிங் 24-வது வயதில் தூக்கிலிடப்பட்டார். இந்நிகழ்வானது மேலும் பல இளைஞர்களை இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடவும் சோசலிசக் கொள்கைகள் இந்தியாவில் பரவவும் வழிவகுத்தது.
முக்கிய நிகழ்வுகள்:-
* 1801 - ரஷ்யாவின் முதலாம் பவுல் மன்னன் வாள் ஒன்றினால் வெட்டப்பட்டுக் கொலை செய்யப்பட்டான்.
* 1816 - அமெரிக்க மதப் பிரசாரகர்கள் கொழும்பு வந்தடைந்தனர்.
* 1848 - நியூசிலாந்தின் டுனெடின் நகரில் முதலாவது தொகுதி ஸ்கொட்டிஷ் குடியேறிகள் தரையிரங்கினர்.
* 1857 - எலிஷா ஒட்டிஸ் முதலாவது உயர்த்தியை நியூயார்க் நகரில் அமைத்தார்.
* 1868 - கலிபோர்னியா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
* 1903 - ரைட் சகோதரர்கள் தமது வெற்றிகரமான முதலாவது வானூர்திக்கான காப்புரிமம் பெறுவதற்கு விண்ணப்பித்தனர்.
* 1919 - இத்தாலியின் மிலான் நகரில் முசோலினி தனது பாசிச அரசியல் இயக்கத்தை ஆரம்பித்தார்.
* 1933 - ஹிட்லர் ஜெர்மனியின் சர்வாதிகாரியானது ரெய்க்ஸ்டாக்கி னால் சட்டபூர்வமாக்கப்பட்டது.
* 1940 - முஸ்லீம் லீக், இந்தியாவை மத அடிப்படையில் பிரிக்கும் கோரிக்கையை வெளியிட்டது.
* 1942 - இரண்டாம் உலகப் போர்: இந்தியப் பெருங்கடலில், அந்தமான் தீவுகளை ஜப்பானியர் கைப்பற்றினர்.
* 1954 - இலங்கையைச் சேர்ந்த மு. நவரத்தினசாமி பாக்குநீரிணையை நீந்திக் கடந்தார்.
* 1965 - ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது இரு விண்வெளிவீரர்களைக் கொண்ட நாசாவின் ஜெமினி 3 விண்கலம் ஏவப்பட்டது.
* 1966 - தனது முதல் கரந்தடி தாக்குதலில் சே குவேராவின் அணி வெற்றிகரமாக பொலிவிய ராணுவப்பிரிவை தோற்கடித்தது.
* 1982 - குவாத்தமாலாவின் பெர்னாண்டோ கார்சியா தலைமையிலான அரசு ராணுவப் புரட்சி ஒன்றில் கவிழ்ந்தது.
* 1994 - சைபீரியாவில் ரஷ்ய ஏரோபுலொட் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 75 பேர் கொல்லப்பட்டனர்.
* 1996 - தைவானில் முதற்தடவையாக நேரடித் தேர்தல் இடம்பெற்று லீ டெங்-ஹூய் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
* 1998 - டைட்டானிக் திரைப்படம் 11 ஆஸ்கார் விருதுகளை வென்றது.
* 2001 - ரஷ்யாவின் மீர் விண்வெளி நிலையம் வளிமண்டலத்தில் வெடித்து, பீஜியின் அருகில் தெற்கு பசிபிக் பெருங்கடலில் வீழ்ந்தது.