ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி
நாம் அறிந்த விளக்கம் :
பேச்சு பெருசா இருக்கும்இ செயல்ல ஒண்ணும் இருக்காது என்று இடித்துரைப்பார்களே அதுபோலதான் இந்த பழமொழியும் உலக வழக்கில் பொருள் கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால் இதன் பொருளை ஆராய்ந்தால் ஒரு அற்புதமான விளக்கம் கிடைக்கிறது.
ஓட்டைக் கப்பலும் ஒன்பது மாலுமிகளும் யாரென்று தெரிந்தால் ஆச்சரியப்பட்டு போவீர்கள் அது நாம்தான். குழப்பமாக இருக்கிறதா ஒட்டைக் கப்பல் என்பது மனித உடலையும் ஒன்பது மாலுமிகள் என்பது நம் உடலில் உள்ள பல்வேறு துவாரங்களையும் குறிக்கிறது. எனவேதான் இந்த மனித வாழ்க்கையில் ஒருவனுக்கு மரணம் நேரும்போது அவனுடைய உயிர் மூச்சு அந்த உடலின் எந்த ஓட்டை வழியேனும் வெளியேறலாம் என்பதற்காய் பெரியோர்கள் நிலையற்ற இந்த மனித வாழ்வை குறிக்கும் போது ஓட்டைக் கப்பலுக்கு ஒன்பது மாலுமி போய் ஆக வேண்டியதைப் பாரப்பா என்று சொல்லி வைத்தார்கள்