புல் தடுக்கிப் பயில்வான் போல
நாம் அறிந்த விளக்கம் :
புல் தடுக்கி எங்கேயாவது யாரேனும் விழுந்திருப்பதாய் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? சில நேரங்கள் சில பதங்கள் இவ்வாறு பழமொழிகளில் கலந்து விடுகிறது. புல் தடுக்கி என்பதை நம்பவே முடியாது. வேண்டுமானால் சிலவகை காட்டுப் புல்கள் அடர்ந்து புதராய் இருக்கும் இடத்தில் புல் இடறி வேண்டுமானால் பொருள் கொள்ளலாம். அப்படி ஒரு சம்பவத்தால் வந்ததுதான் இந்த பழமொழி. ஆனால் இதன் உண்மை விளக்கம் அல்ல
விளக்கம் :
புல் தடுக்கி பயில்வான் என்றால் அது நம் சந்திரகுப்தன் அமைச்சரான கௌடில்யர் என்னும் சாணக்கியர்தான். ஒரு முறை கானகப் பாதையில் காலில் புல் சிக்கி விழுந்தவர் உடனே அதை வேரோடு பிடுங்கி எரித்து சாம்பலாக்கி - கரைத்துக் குடித்தாராம். எதிரிகள் எவ்வளவு சிறிய அளவில் இருந்தாலும் அவர்களை அடியோடு அழிக்க வேண்டுமென குப்தனுக்கு அமைச்சர் சொன்ன அரசியல் அர்த்த சாஸ்திரம் அது. இது தான் உண்மை விளக்கம்.