மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 31 March 2019

கோடைக்காலத்தில் சாப்பிட வேண்டிய 5 பழங்கள்.. !


   நாம் வெப்பமண்டலத்தில் இருப்பதால் மற்ற நாடுகளை விட அதிகமாக வெயிலை சமாளிக்க வேண்டிய நிலைமை நமக்கு இருக்கிறது. அதிகமாக 47 டிகிரி வெயிலை நாம் எதிர்கொண்டாலும் பல நாட்கள் குளிர் காலத்தை விட வெயில் காலத்தை தான் அதிகமாக எதிர்பார்க்கிறோம். இதற்கு காராணம் இந்தியாவில் கிடைக்கும் கோடைக்கால பழங்கள் தான்.

தர்பூசணி

✴ இதற்கு தண்ணீர் பழம் என்ற மற்றொரு பெயரும் உண்டு. அதாவது சூட்டை தணிக்கும் சிறந்த அதிக நீர் சத்துக்கொண்ட பழம் தர்பூசணி ஆகும்.

✴ 94 சதவீதம் தண்ணீர் இருப்பதால் வெயிலுக்கு ஏற்ற பழம் என்று கூறலாம். இதில் இருக்கும் மற்ற சிறப்பம்சங்கள் பொட்டாசியம், விட்டமின் எ மற்றும் சி. மேலும் இதில் எந்த வித கலோரிகளும் இல்லாததால் இதயத்திற்கும், கண்ணுக்கும் நல்லது.

நாவல்ப்பழம் :


✴ நாவப்பழத்தின் தனித்துவமான சுவையே இப்பழத்தின் சிறந்த அம்சம் ஆகும். மற்ற பழங்கள் போலவே ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்த பழம் நாவப்பழம் ஆகும்.

மாம்பழம் :

✴ நம்மால் தவிர்க்க முடியாத பழம் மாம்பழம் ஆகும். மா, பலா, வாழை என எப்பொழுதுமே மாம்பழம் முன்னிலை வகிக்கிறது. புத்தருக்கு பிடித்த பழம் மாம்பழம்.

✴ இதில் அல்போன்ஸா, இமாம்பசந்த், மல்கோவா போன்ற பல வகைகள் உண்டு. நிச்சயம் இந்த பழத்தை சாப்பிட மறக்காதீர்கள்.

கிர்ணிப்பழம் : 

✴ தர்பூசணியை தொடர்ந்து கிர்ணிப்பழத்திலும் அதிக தண்ணீர் சத்துக்கள் உள்ளன. இந்தியாவில் அதிகம் கிடைக்கும் இந்த பழம் கண்ணுக்கு நல்லது.

✴ இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் பீட்டா-கரோட்டின் கண்ணுக்கு சத்து அளிக்கின்றது. இதில் இருக்கும் விட்டமின் எ மற்றும் சி சருமத்தை பொலிவடையச் செய்யும். 

மல்பெர்ரி :

✴ இனிப்பு மற்றும் துவர்ப்பு சுவைக்கொண்ட இந்த பழத்தில் அதிக பாரம்பரிய மருந்து குணங்கள் உண்டு. வேரிலிருந்து பழம் வரை அனைத்தையும் மருந்தாக பயன்படுத்தலாம்.

✴ இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடண்ட் மற்றும் அந்தோசியனிகள் புற்று நோயை குணப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. 

Pages