பந்திக்கு முந்திக்கோ படைக்கு பிந்திக்கோ
நாம் அறிந்த விளக்கம் :
விருந்து நடக்கும் இடங்களில் சாப்பாட்டுக்கு முதல் வரிசையும் போரில் கடைசியாளாக இருப்பின் தற்காப்பதற்கு நல்லதும் என நேரிடையாக பொருள் கொள்ளப்படும் அதிக உலக வழக்கில் உள்ள பழமொழியாக இது அறியப்படுகிறது.
இந்த பழமொழியின் உண்மையான வடிவம் பந்திக்கு முந்தும் படைக்கு பிந்தும் என்பதாகும். இந்தப் பழமொழியை சாதாரணமாக உட்பொருள் கொண்டால் பந்திக்கு அமர்ந்து சாப்பிடுகையில் கை முந்தும். போர்க்களத்தில் வேலோஇ வாளோஇ வில்லுக்கோ கை பிந்தும். எவ்வளவு கை பிந்துகிறதோ அந்தளவிற்கு அந்தப் படை முந்தும். இதல்லாது இன்னொரு பொருளையும் இதனூடே சொல்வார்கள். அந்த கால புலவர்கள் உடல் உறுப்புகளைப் பற்றி பாடி வைக்கையில் நமது வலது கையைப் பற்றி சொல்லும்போது பயன்படுத்தப்பட்ட வாக்கியமே இந்த பழமொழி. வில் அம்பு பயன்படுத்தி நடந்த போர்களில் வில்லில் அம்பு வைத்து நான் இழுக்க கை பின்னே போகும். அதே கை உணவருந்தையில் முன்னே போகும். இதை அர்த்தம் கொண்டே இந்த பழமொழி பயன்படுத்தப்பட்டது.