அடி உதவுவது போல அண்ணன் தம்பி உதவ மாட்டான்
நாம் அறிந்த விளக்கம் :
வன்முறை மட்டுமே சில சமயங்களில் பயனளிக்க கூடும் என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அவ்விதமே இன்று வரை விளக்கப்பட்டு கொண்டிருக்கிற பழமொழி இது. ஆனால் இது உண்மையான விளக்கம் அல்ல.
விளக்கம் :
இந்த பழமொழியில் அடி என்பது இறைவனின் திருவடியை குறிக்கிறது. துன்பங்கள் நேரும்போது எல்லாம் அவனே என இறைவனை நினைத்துக் கொண்டோர்க்கு எவ்வித துன்பமுமில்லை. அந்த இறைவனின் அருள் உதவுவது போல் யாரும் உதவ முடியாது என்பதை குறிக்கும் விதமாகவே சொல்லப்பட்ட பழமொழி இது. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.