மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 1 March 2019

உடலுக்கு சக்தி தரும் சூரிய ஒளி

    உடல் உறுப்புகளின் அத்தியாவசியமான செயல்பாட்டுக்கு வைட்டமின் டி அவசியமானது. சூரிய ஒளியில் சில நிமிடங்களை செலவிடுவதன் மூலம் ரத்த அணுக்களில் உள்ள வைட்டமின் டி அளவை அதிகரிக்க செய்யலாம்.

     இந்தியா போன்ற வெப்ப மண்டல நாடுகளில் ஆண்டு முழுவதும் போதுமான அளவு சூரிய ஒளி தடையின்றி கிடைக்கிறது. எனினும் நமது நாட்டில் வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை அதிகளவில் இருக்கிறது. 65 முதல் 70 சதவீதம் பேர் வைட்டமின் டி குறைபாடு கொண்டவர்களாக இருக்கிறார்கள்.

    உலகளவில் 100 கோடி பேருக்கு வைட்டமின் டி குறைபாடு பிரச்சினை இருக்கிறது. தாமதமாக தூங்க செல்வது, காலை வேளையில் சூரிய வெளிச்சம் உடலில் படாமல் இருப்பது, குளிரூட்டப்பட்ட அறைகளில் அதிக நேரம் செலவிடுவது, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவு பழக்கம் போன்றவை வைட்டமின் டி பற்றாக் குறைக்கு முக்கிய காரணமாக இருக்கிறது. மற்ற வைட்டமின்களை போல் அல்லாமல் வைட்டமின் டி உடலில் உள்ள உயிரணுக்கள், ஹார்மோன்களின் செயல்பாடுகளுக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தவும், சரும ஆரோக்கியத்தை பராமரிக்கவும் வைட்டமின் டி தேவைப்படுகிறது.

    முதுகுவலி தசை வலி, சோர்வு, மன அழுத்தம், முடி கொட்டுதல் போன்ற பிரச்சினை கள் வைட்ட மின் டி பற்றாக் குறையால் ஏற்படுவ தாகும். அதிக எடை, உடல் பருமன் கொண்டவர்கள், போதுமான அளவு மீன், பால் பொருட்களை சாப்பிடாதவர்கள், சூரிய ஒளியில் இருந்து விலகி இருப்பவர்கள், வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துபவர்கள், தொடர்ந்து உள் அறைகளிலேயே தங்கி இருப்பவர்கள் வைட்டமின் டி குறைபாடுக்கு ஆளாக நேரிடும்.

Pages