மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 11 March 2019

🍭🍭🍭பப்பாளி பழத்தில் இவ்வளவு நன்மைகளா? 🍎🍎🍎


     தமிழகத்தில் எங்கும் எளிதில் கிடைக்கும் பழங்களில் மிக முக்கியமானது பப்பாளி பழம். விலையும் மிக குறைவுதான். இந்த பப்பாளி பழத்தின் மருத்துவ குணங்கள் மனிதனுக்கு மிகவும் இன்றியமையாதவையாக உள்ளது. 

    பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் தொடர்ந்து பூசி வந்தால் புண்கள் ஆறும். 

   பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட்டால், நாக்குப்பூச்சிகள் அழிந்து போகும். 

   பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூசினால் புண்கள் உடனே ஆறும். 

    பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வந்தால் புண்கள் விரைவில் ஆறும். 

    பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும். 

    பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் இருந்தால் அதன்மேல் பூசி வந்தால் வீக்கம் விரைவில் கரைவதை பார்க்கலாம். 

   பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூசினால், வலியும், விஷமும் இறங்கும் என்பது உறுதி. 

    பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வந்தால், பால் நன்றாக சுரக்கும். 

     பப்பாளி பழத்தை குழந்தைகளுக்கு அடிக்கடி கொடுத்து வந்தால், உடல் வளர்ச்சி விரைவாக இருக்கும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும். 


     பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். 

    பப்பாளிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வீக்கம் குறையும் வாய்ப்பு உள்ளது. 

   பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வந்தால், நரம்புத் தளர்ச்சி நோய் விரைவில் குணமாகும். 

    நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும். 

    எனவே, மிக எளிதில் கிடைக்கும் இந்த பப்பாளி பழத்தை உபயோகப்படுத்தி பயன்பெறலாம்.

Pages