மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 7 March 2019

🌏🌏மற்றவர்களை ஏமாற்ற நினைத்தால்...🌹🌹

Fair Shares..!

     Ali and Abraham were brothers. Their mother died very early. Their father also died after some time. They left a cow for their sons.


   Ali was cunning. He was greedy too. Abraham was kind and honest. He trusted his elder brother. They wanted to divide their father′s property. Ali said, ′I will be very fair with you, Abraham. You take the front portion of the cow as your share. I will take the hind side of the cow′. Abraham also agreed.

    Abraham fed the cow very well fresh grass and water. The cow became healthy. It gave a lot of milk. Ali got milk. He sold the milk and got a lot of money. But he did not share the money with Abraham. Abraham asked his brother about his share of the money. Ali replied, ′I got the milk from my portion of our cow. Hind part is mine as per the agreement′. Abraham said nothing. 

   A wise man advised Abraham. He said something in the ear of Abraham. The next day Ali was milking the cow. Then Abraham beat the cow in the front portion. The cow started kicking Ali. Ali shouted Abraham, ′You fool! Why do you beat the cow? Do not you notice that I′m milking?′. 


  Abraham replied ′The front portion of the cow is mine. I can do anything. That is our agreement′. 

   Ali could not say anything. Finally, he agreed to share the money. Both the brothers lived happily. They shared the profit. 

    அலியும் ஆபிரகாமும் சகோதரர்கள். அவர்களின் தாயார் முன்பே இறந்து விட்டார். அவர்களது தந்தையும் சில காலத்திற்குப்பின் இறந்தார். அவர்கள் தங்களுடைய மகன்களுக்காக ஒரு பசுவை விட்டுச் சென்றனர்.

   அலி மிகவும் தந்திரமானவன். மிகவும் பேராசை பிடித்தவனும் கூட. ஆபிரகாம் அன்பாகவும் நேர்மையாகவும் இருந்தார். அவர் தனது மூத்த சகோதரரை நம்பினார். அவர்கள் தந்தையின் சொத்துக்களை பிரிக்க நினைத்தார்கள். அலி ஆபிரகாமிடம், 'நான் உனக்கும் மிகவும் நேர்மையாக இருப்பேன். பசுவின் முன் பகுதியை நீ உன்னுடைய பங்காக எடுத்துக்கொள். நான் பசுவின் பின் பக்கத்தை எடுத்துக்கொள்கிறேன்" என்றான். ஆபிரகாமும் அதை ஏற்றுக் கொண்டான். 

   ஆபிரகாம் மாட்டிற்கு நல்லப் புல்லையும் தண்ணீரையும் அளித்தான். மாடு நன்கு ஆரோக்கியமாகியது. அது நிறைய பால் கொடுத்தது. அலி அந்த பாலை பெற்றுக் கொண்டான். அவர் அந்த பாலை விற்பனை செய்தார், நிறைய பணம் கிடைத்தது. ஆனால் அலி அந்த பணத்தை ஆபிரகாமுடன் பகிர்ந்துக் கொள்ளவில்லை. ஆபிரகாம் தம்முடைய சகோதரரிடம் பணத்தின் பங்கீட்டை பற்றி கேட்டார். உடனே அலி, 'மாட்டில் எனக்காக ஒதுக்கப்பட்ட பகுதியிலிருந்து தான் பால் கிடைக்கிறது. ஒப்பந்தத்தின் படி பின்பக்க பகுதி என்னுடையது" என்றான். இதை கேட்ட ஆபிரகாம் எதுவும் கூறவில்லை.

   ஞானமுள்ள மனிதன் ஒருவர் ஆபிரகாமிற்கு அறிவுரை கூறினார். அவர் ஆபிரகாமின் காதில் ஏதோ ஒன்றை கூறினார். அடுத்த நாள் அலி பால் கறந்துக் கொண்டிருந்தான். பின்னர் ஆபிரகாம் முன் பக்கத்தில் மாட்டை அடித்தார். மாடு அலியை உதைக்க ஆரம்பித்தது. அலி ஆபிரகாமிடன் 'முட்டாளே! ஏன் பசுவை அடிக்கிறாய்? நான் பால் கறந்து கொண்டிருப்பதை நீ கவனிக்க வில்லையா?" என்று கூச்சலிட்டான். 

    ஆபிரகாம் 'பசுவின் முன் பகுதி என்னுடையது. நான் எதை வேண்டுமானாலும் செய்வேன். அது தான் நம்முடைய ஒப்பந்தம்" என்று பதிலளித்தான். 

   அலி எதையும் கூற முடியவில்லை. இறுதியாக, அலி பணத்தை பகிர்ந்து கொள்ள ஒப்புக்கொண்டான். இருவருமே மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார்கள். அவர்களுடைய இலாபத்தை பகிர்ந்து கொண்டனர்.

Pages