மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday, 7 March 2019

🍎🍎🍎காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனை...!!

காலத்தை வென்று நிற்கும் கல்லணை!!

     கல்லணை திருச்சியிலிருந்து ஏறத்தாழ 20 கி.மீ தொலைவில் உள்ளது. உலகில் கட்டப்பட்ட அணைக்கட்டுகளில் மிகப் பழமையானதும், பல நூற்றாண்டுகளுக்கு (2000 ஆண்டுக்கு மேல் பழமையானது) மேலாகப் பயன்பாட்டில் இருந்து வருவது கல்லணை ஆகும். கல்லணையின் நீளம் 1080 அடி, அகலம் 66 அடி, உயரம் 18 அடி.

சிறப்புகள் :

    இதுவே உலகின் மிகப்பழமையான நீர்ப்பாசனத் திட்டம்.

   தற்போதுள்ள அணைகளில் கல்லணையே மிக பழமையானதும், இன்றளவும் சிதையாமலும் உள்ளது.

   மணலில் அடித்தளம் அமைத்து கல்லணையைக் கட்டிய பழந்தமிழர் தொழில்நுட்பம் இன்றுவரை வியத்தகு சாதனையாகப் புகழப்படுகிறது.

   இது கல்லும், களிமண்ணும் மட்டுமே கொண்டு அமைக்கப்பட்டது.

   பல நூற்றாண்டுகளை கடந்தும் உறுதியோடு நிற்கும் கல்லணை தமிழர்களின் கட்டுமான திறனை பறைச்சாற்றி கொண்டிருக்கிறது. 

   கல்லணை, கரிகாலன் என்ற சோழ மன்னரால் கட்டப்பட்டது. உலகமே வியக்கும் அளவிற்கு இந்தியாவின் கட்டிடக்கலைக்கு பெருமை சேர்க்கும் விதமாக காவிரி நதியின் மீது கருங்கற்களை கொண்டு கட்டப்பட்டது. 

    காலத்தை வென்று நிற்கும் தமிழனின் பெரும் சாதனையாக கல்லணை திகழ்கிறது.

   பல இடங்களிலிருந்து தினந்தோறும் ஏராளமானோர் இவ்வணையைக் காண வருவதால், இது ஒரு சுற்றுலாத் தலமாகவும் விளங்குகிறது.

    நெற்களஞ்சியமாம் தஞ்சை தரணியின் வளத்திற்கு இன்றளவும் ஆதாரமாகத் திகழ்கிறது இந்த கல்லணை. 

   பழமையான இந்த அணையை கட்டிய கரிகால சோழனை கௌரவிக்க கல்லணையில் இருந்து திருக்காட்டுப்பள்ளி செல்லும் சாலையில் காவிரி ஆற்றின் இடது கரை ஓரத்தில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. 

    இந்த மண்டபத்தில் யானையின் மீது கரிகால சோழன் அமர்ந்த நிலையில் வெண்கலச் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

பார்க்க வேண்டிய இடங்கள் :

மலைக்கோட்டை.
முக்கொம்பு.
சமயபுரம்.
ஸ்ரீரங்கம் ஆலயம்.

Pages