கோடைவெயிலை எந்தளவிற்கு வெறுக்கிறோம் அந்தளவுக்கு விரும்பும் பழம், சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம், அதுதான் மாம்பழம்.
மனிதர்களுக்கு ஆரோக்கிய சீர்க்கேட்டை உண்டாக்குகின்றன என்றால் நம்ப முடிகிறதா?
1. கார்பைடு கற்கள்:
இது ஒரு ரசாயனப் பொருள். சுத்தமான ரசாயனப் பொருள் வெண்மை நிறமாகவும், சற்று கலப்படமான நிலையில் கருப்புகலந்த சாம்பல் நிறத்துடனும் இருக்கும். இதில் ஆர்சனிக் மற்றும் பாஸ்பரஸ் ஹைட்ரைடு போன்ற நச்சுப்பொருட்கள் இருக்கும். இவற்றின் மீது ஈரம் பட்டவுடன் அசிட்டிலின் என்ற வாயுவை வெளியேற்றுகின்றது. இவ்வாயு பழங்களைப் பழுக்கவைக்கின்றது. இதன் விலை கிலோ ரூ.25-30 வரை இருக்கும். ஒரு கிலோ இவ்வுப்பைக் கொண்டு சுமார் 200 கிலோ வரை மாம்பழங்களைப் பழுக்க வைக்க முடியும்.
2. கற்கள் மூலம் பழுத்த பழங்களின் மேல்தோல் மட்டுமே மஞ்சள் நிறமாக மாறும். அதன் உள்ளே எந்தவிதமான ரசாயன மாற்றம் இன்றி அப்படியே இருக்கும். அதனால் இனிப்பு சுவை குறைந்து பழங்கள் மணமின்றி இருக்கும். இயற்கையிலேயே பழுத்த பழங்களின் மேற்தோல் ஒரே சீராக நிறம் மாறி இருக்காது.
எனவே நாம் கற்கள் மூலம் பழுத்த பழங்களை எளிதில் இனம் காண முடியும்.
3. கார்பைடு உபயோகித்து பழுக்க வைத்த பழங்களை உண்பதால் வாந்தி, பேதி, நெஞ்சில் எரிச்சல், குடற்புண், கண்க ளில் எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம் மற்றும் உணவை விழுங்குவதில் சிரமம் போன்ற உடல் நலக்கேடுகள் உண்டாகலாம். தொடர்ந்து இவ்வாறு பழுக்க வைத்த பழங்களைச் சாப்பிட்டால் தூக்கமின்மை, தலை வலி, குறைந்த ரத்த அழுத்தம் போன்ற உடல்நலக் கேடுகள் உண்டாகும்.