மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 3 March 2019

மலைகளின் இளவரசி

கொடைக்கானல் !!

   கொடைக்கானல், திண்டுக்கல் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி. திண்டுக்கல்லில் இருந்து ஏறத்தாழ 90 கி.மீ தூரத்தில் இருக்கிறது கொடைக்கானல். இந்த மலைவாழிடம் கடல் மட்டத்திலிருந்து 2133 மீட்டர் உயரத்தில் உள்ளது.


சிறப்புகள் :

     அட்டகாசமான மலைவாச ஸ்தலம். சில்லென்று வீரும் காற்று, இதமான குளிர், தரையைத் தொடும் மேகங்கள் போன்ற மனதை கொள்ளை கொள்ளும் அழகுடன் காட்சியளிக்கிறது கொடைக்கானல்.


    எழில் கொஞ்சும் அழகுடன், புகழுடன் இருப்பதால் இந்நகரத்தை 'மலைகளின் இளவரசி" என்றும் அனைவரும் அன்போடு அழைக்கிறார்கள்.

    பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர் செடிகள் இங்கே பரவலாக வளர்கின்றன.

   கொடைக்கானல் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ளது. இதனால் இங்கு குளுமையான தட்ப வெட்பம் நிலவுகிறது. 

எப்படி செல்வது?

     திண்டுக்கல் மற்றும் மதுரைக்கு இடையில் அமைந்துள்ள கொடை ரோடு என்ற ஊரில் இறங்கி அங்கிருந்து கொடைக்கானலுக்கு மகிழுந்து அல்லது பேருந்து மூலம் செல்ல வேண்டும். 

பார்க்கவேண்டிய இடங்கள்:

குறிஞ்சி ஆண்டவர் கோவில்
கொடைக்கானல் வீதி உணவு
பிரையண்ட் பார்க்
தொலைநோக்கிக் காப்பகம் மற்றும் கோக்கர்ஸ் வாக்
தூண் பாறைகள்
கொடைக்கானல் ஏரி
கவர்னர் தூண்
கோக்கர்ஸ் வாக்
அப்பர் லெக்
குணா குகைகள்
தொப்பித் தூக்கிப் பாறைகள்
மதி கெட்டான் சோலை
செண்பகனூர் அருங்காட்சியம்
டால்பின் னொஸ் பாறை
பேரிஜம் ஏரி (24 ஹெக்டேர் பரப்புள்ள பெரிய அழகான ஏரி)
பியர் சோலா நீர்வீழ்ச்சி
அமைதி பள்ளத்தாக்கு
செட்டியார் பூங்கா
படகுத் துறை
வெள்ளி நீர்வீழ்ச்சி
கால்ஃப் மைதானம்
தற்கொலை முனை

இதர சுற்றுலா தலங்கள் :

பேரணை 
சிறுமலை
மலைக்கோட்டை
பழனி
திருமலைக்கேனி

Pages