மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 18 July 2022

இதை சாப்பிட்டால்...



     தமிழில் இலந்தை என்று அழைக்கப்படும் இலந்தை பழத்தின் தாயகம் இந்தியா/தமிழ்நாடு, சீனா. வெப்பம் அதிகமுள்ள இடங்களில் வளரும் தன்மை கொண்ட இந்த மரம் 9 மீட்டர் உயரம் வரை கூட வளரும். இலந்தையின் 100 கிராம் கொள்ளளவில் கிடைக்கும் கலோரி 74% மாவுப்பொருள், 17% புரதம், 8% தாது உப்புகளும், இரும்புச்சத்தும் உள்ளது.


கி.மு 6ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட கவிதைகளின் ஒரு சீனப் புராணக்கதை :

     'கிளாசிக் ஆப் ஓடிஸ்" என்பதில் இலந்தை பற்றிய முந்தைய குறிப்பு இருப்பதை நாம் காணலாம். 2000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே இலந்தை மருத்துவ ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் சிரியா மற்றும் வடகொரியாவிலிருந்து தோன்றியதாக கருதப்படுகிறது. அதன்பின், கிழக்கே சீனாவிலும் பரவலாக வளர்ந்துள்ளது. சீனாவில் 400க்கும் மேற்பட்ட பயிர் வகைகள் இருந்தாலும் இலந்தைக்கு முக்கியத்துவம் கொடுத்து பயிரிட்டு வந்தனர். இது 1908ஆம் ஆண்டு ஒரு சிறந்த விவசாயி ஒருவரால் USDA %லம் அமெரிக்காவிற்கும் கொண்டு வரப்பட்டது.



இலந்தையின் முக்கிய மருத்துவ பயன்கள் :

இலந்தை நினைவாற்றலை அதிகரிக்கும் என்பதால் படிக்கும் மாணவர்களுக்கு இது மிகவும் உகந்தது.

பித்தத்தை சமநிலைப்படுத்தி, பித்தத்தினால் ஏற்படும் தலைசுற்றல், வாந்தி, இளநரைக்கு இது மிகச்சிறந்த மருந்தாக நம் முன்னோர்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது.

இலந்தை உடல் சூட்டை தணித்து குளிர்ச்சியை தரக்கூடியது. கோடைக்கால கட்டிகளுக்கு சிறந்த மருந்து.

இலந்தையில் சுண்ணாம்புச்சத்து (கால்சியம்) உள்ளதால் எலும்புகளையும், பற்களையும் வலுவடையச் செய்கிறது. எலும்புருக்கி நோய் என்று அழைக்கப்படும்(TB) நோய்க்கு இயற்கை வழியில் இது ஒரு மிகச்சிறந்த மருந்து.

பகல் உணவுக்கு பிறகு இலந்தை உண்டு வந்தால் செரிமானம் ஆவதுடன் பித்தமும், கபமும் சாந்தமுறும்.

பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஏற்படும் உபாதைகளான உதிரப்போக்கை தடுக்கும் தன்மை கொண்டது.

நன்கு பசியை உண்டாக்கும்.




Pages