வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்புக்கு (சிம் கார்டு) ஆதார் எண் கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
செல்போன் எண் மற்றும் வங்கி கணக்கு தொடங்குவதற்கு, அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது. இதற்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில், சமூக ஆர்வலர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாகம் 26 ஆம் தேதி வழங்கிய தீர்ப்பில், தனியார் நிறுவனங்கள் ஆதார் எண் கட்டாயப்படுத்தக் கூடாது என தீர்ப்பளித்து. முக்கியமாக குடிமக்களுக்கான அடிப்படை உரிமைகள் ஆதார் எண் இல்லை என்பதற்காக மறுக்கக் கூடாது, வங்கிக் கணக்குகள் தொடங்குவதற்கு, செல் போன் சிம் கார்டு வாங்குவதற்கு ஆதார் அவசியமில்லை என்றும், கல்வி என்பது ஒவ்வொருவரின் அடிப்படை உரிமை என்பதால், சிபிஎஸ்இ, நீட் தேர்வு மற்றும் பள்ளியில் மாணவர் சேர்க்கைபோன்ற எந்தவொரு செயலுக்கும் ஆதார் கட்டாயமாகக் கூடாது என உத்தரவளித்தது.
மேலும், குழந்தைகளுக்கு ஆதார் எண் கட்டாயம் எனவும், ஆதார் சட்டத்தில் சில திருத்தங்களை கொண்டு வரவும் உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவித்திருந்தது.
இதனிடையே, வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு (சிம் கார்டு) பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பதற்கு மீண்டும் சட்ட அங்கீகாரம் அளிக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக டெலிகிராப் சட்டத்திலும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்திலும் திருத்தங்கள் கொண்டுவர பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கி கணக்கு மற்றும் செல்போன் இணைப்பு (சிம் கார்டு) பெறும்போது ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என்ற அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன்படி, சிம்கார்டு பெறவும், வங்கி கணக்கு தொடங்கவும் கட்டாயம் ஆதார் எண்ணை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது