அமெரிக்கா என்றவுடன் நம் நினைவில் வரும் அடையாள சின்னங்களில் ஒன்றுதான் சுதந்திர தேவி சிலை. நியூயார்க் துறைமுக வாயிலில் அமைந்துள்ள லிபர்டி தீவு எழில் கொஞ்சும் தீவு ஆகும். இத்தீவிற்கு, மேலும் அழகு சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளதே சுதந்திர தேவி சிலை.
1886ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 28ஆம் தேதி இந்த சிலை திறக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு பிரான்ஸ் அன்பளிப்பாக வழங்கிய சுதந்திர தேவி சிலையினை உலக வரலாற்றின் ஒப்பற்ற பரிசு என்று கூறலாம்.
அமெரிக்க தேவி சிலையை ஆங்கிலத்தில் status of Liberty என்று கூறுவர். ஆனால், இந்த சிலையின் முழுப்பெயர் Liberty Enlightening The World என்பதே ஆகும்.
ஒரு வருடத்தில் மட்டும், அமெரிக்காவின் சுதந்திர தேவி சிலையை காண்பதற்காகவே சுமார் 32 லட்சம் சுற்றுலாப்பயணிகள் அமெரிக்காவிற்கு செல்கிறார்கள்.
அமெரிக்க சுதந்திர தேவி சிலையானது பச்சை வண்ணம் உடையது என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். ஆனால், உண்மையில் இந்த சிலை முதலில் வெளிர்சிவப்பு பழுப்பு நிறத்தில் இருக்க வேண்டும் என்றுதான் தீர்மானிக்கப்பட்டு பிறகு மாற்றப்பட்டது.
இந்த சுதந்திர தேவி சிலை சர்வதேச ரீதியில் நட்பையும், விடுதலையினையும், மக்களாட்சியினையும் வெளிப்படுத்தும் சின்னமாக விளங்குகின்றது. அமெரிக்காவின் தேசியச் சின்னமாக விளங்குகிறது.
 அமெரிக்க சுதந்திர தேவியின் தலையில் ஏழுமுற்கள் போல் கொண்ட கிரீடம் உள்ளது. ஒவ்வொரு முற்களும் உலகில் உள்ள ஏழு கடல் மற்றும் ஏழு கண்டங்களை குறிப்பிடுபவை ஆகும்.
இது 1984ஆம் ஆண்டு யுனொஸ்கோவால் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக அறிவிக்கப்பட்டது. சுதந்திர தேவி சிலையின் உயரம் 46 மீட்டர். இச்சிலையை வடிவமைத்தவர் பிரெடெரிக் பார்த்தோடியால் எனும் சிற்பி ஆவார்.
கடல்வழியாகச் செல்பவர்கள் தூரத்திலிருந்து பார்க்கும்போது, கம்பீரத் தோற்றமுடைய ஒரு பெண்மணி சுதந்திரம் பெற்ற மகிழ்ச்சியில் இருப்பது போன்ற தோற்றத்துடனும், கடலில் மிகப் பெரிய வீரன் வெற்றிக் களிப்போடு தீச்சுடரை ஏந்திவருவது போன்ற கம்பீரத் தோற்றத்துடனும் காட்சியளிக்கிறது.
சுதந்திர தேவி சிலையானது ரோமபுரி கடவுளான Libertas என்பவரை ஊக்கம் கொண்டு வடிவமைக்கப்பட்ட உருவமாகும்.
சுதந்திர தேவி சிலையின் தலைப்பகுதி 1878ஆம் ஆண்டு பாரிசில் நடந்த World's Fair எனும் மாநாட்டில் காட்சிக்கு வைக்கப்பட்டது.
லிபர்டி எனும் தீவில் வாழ்ந்து வரும் ஓர் குடும்பம் சுதந்திர தேவி சிலைப் போன்றே வீட்டைக்கட்டி வாழ்ந்து வருகிறார்கள்.
சுதந்திர தேவி சிலைக்கு ஒரு வருடத்தில் ஏறத்தாழ 600 முறையாவது மின்னல் தாக்குதல் ஏற்படுகிறது என்று கூறப்படுகிறது.