மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 14 March 2019

மன்னர் எப்படி இருக்க வேண்டும்?

King Aryan and Vaishal..!

     Once upon a time, there were two kings who ruled over neighboring kingdoms. King Aryan was a great warrior. All his people loved him because he always takes care of his people′s safety and welfare.

    King Vaishal was a very lazy man who loved to spend his time in entertainment. His people were very angry because he never came out of the palace to look into people′s needs.

     One day Sultan decided to capture these two kingdoms. King Aryan′s army was alert and was ready to face the war. And the people of the kingdom came front to protect their King and the kingdom. 

   While the people of King Vaishal kingdom were not interested to protect their King who did nothing for their welfare. King Vaishal realized his foolishness now. He was defeated in the war.

     King Aryan on the other hand, defeated the Sultan with the help of his people. 

Moral : As you sow so shall you reap.

    ஒரு காலத்தில், அண்டை ராஜ்யங்களை ஆட்சி செய்து கொண்டிருந்த இரண்டு அரசர்கள் இருந்தார்கள். ஆர்யன் என்ற அரசன் மிகப்பெரிய போர்வீரன் ஆவார்.

    அவருடைய மக்கள் அனைவரும் அவரை நேசித்தார்கள், ஏனென்றால் அவர் எப்போதும் தனது மக்களின் பாதுகாப்பையும் நலனையும் கவனித்துக்கொள்வார். 

     வைஷல் என்ற அரசன் தனது நேரத்தை பொழுதுபோக்கிற்காக செலவழிக்க விரும்பும் ஒரு சோம்பேறி மனிதன். அவர் அரண்மனையில் இருந்து ஒருபோதும் வெளிவந்து மக்களுடைய தேவைகளைப் கவனிக்கவில்லை என்பதால் மக்கள் அவர் மீது மிகவும் கோபமாக இருந்தார்கள்.

     ஒரு நாள் சுல்தான் இந்த இரண்டு ராஜ்யங்களையும் கைப்பற்ற முடிவு செய்தார். ஆர்யன் என்ற அரசனின் இராணுவம் விழிப்புடன் போரை எதிர்கொள்ள தயாராக இருந்தது. ராஜ்யத்தின் மக்கள் தங்கள் அரசனையும் ராஜ்யத்தையும் பாதுகாக்க முன் வந்தனர்.

      ஆனால் வைஷல் என்ற அரசனின் ராஜ்ய மக்கள் தங்கள் நலனுக்காக எதுவும் செய்யாத அரசரைப் பாதுகாக்க விரும்பவில்லை. இப்போது வைஷல் என்ற அரசன் அவரது முட்டாள்தனத்தை உணர்ந்தார். அவர் போரில் தோற்கடிக்கப்பட்டார்.

    மறுபுறத்தில் ஆர்யன் என்ற அரசன் தனது மக்களின் உதவியுடன் சுல்தானை தோற்கடித்தார்.

நீதி : திணை விதைத்தவன் திணை அறுப்பான், வினை விதைத்தவன் வினை அறுப்பான்.

Pages