மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 17 March 2019

வாழ் அல்லது வாழ விடு.


A big Pool..!

     Once there was a big pool near a village. The villagers used water for drinking and other purpose. The pool was abounded with fish.


    Once a fisherman went fishing to the pool. He cast his net into the pool and sat down. But he was very impatient. So, he tied a long string to a small stone. Then putting it into the pool, he began to stir the water to drive more fish into his net.

   A villager saw and asked him not to make the water muddy. But the fisherman didn′t listen to him. So, the villagers brought some companions armed with weapons. Seeing them, the fisherman got scared. He drew out his stone and apologized. 

Moral : Live or Let Live.

    ஒரு கிராமத்திற்கு அருகில் ஒரு பெரிய குளம் இருந்தது. கிராம வாசிகள் குடிநீருக்காகவும் மற்றும் பிற பயன்பாட்டிற்காகவும் அந்த குளத்தை பயன்படுத்தினார்கள். குளம் முழுவதும் மீன்கள் நிறைந்திருந்தது. 

   ஒருமுறை மீனவர் ஒருவர் குளத்திற்கு மீன்பிடிக்கச் சென்றார். அவர் தனது வலையை குளத்தில் வீசிவிட்டு உட்கார்ந்தார். ஆனால் அவர் மிகவும் பொறுமையற்றவராக இருந்தார். எனவே, அவர் ஒரு சிறிய கல்லை நீண்ட சரத்தில் கட்டி பின்னர் அதை குளத்தில் போட்டு, நிறைய மீன்கள் தன் வலைக்குள் செல்லும்படி தண்ணீரை கலக்க தொடங்கினார்.

    ஒரு கிராமவாசி அவனை பார்த்து தண்ணீரை கலக்க வேண்டாம் என்று கூறினார். ஆனால் அவருடைய பேச்சை மீனவர் கேட்கவில்லை. அதனால், கிராமவாசிகள் சில நபர்களை அழைத்துக் கொண்டு, சில ஆயுதங்களைக் எடுத்து வந்தனர். அவர்களைப் பார்த்து, மீனவர் பயந்து கொண்டு கல்லை தூக்கி எறிந்து, மன்னிப்புக் கேட்டான்.

நீதி : வாழ் அல்லது வாழ விடு.

Pages