இன்றைக்கு நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. எப்படி கால்குலேட்டர் , கம்ப்யூட்டர் இல்லா காலத்தில் மிகுந்த சிக்கலான கணக்குகளை மிக விரைவாக செய்ய முடிந்தது?
இந்த அறிவியல் கண்டுபிடிப்புகள் நமது வேலையை சுலபமாக்குவதோடு நில்லாமல், நேரத்தையும் மிச்சமாக்குகிறது. ஆனால் அதே சமயத்தில் மட மடவென சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால், இன்றைய உலகில், அதிவேகமாக சிந்தித்து முடிவெடுக்கும் திறன் மிகவும் அவசியமான ஒன்று. நமது மூளையின் சிந்திக்கும் திறனுக்கு ஒரு தூண்டுகோலாக, அதிவேக கணக்குகளை செய்ய , தெரிந்துகொள்ள இந்த இணையதளம் உதவியாக இருக்கும்
முடிவில் கணிதம் ஒரு வேப்பங்காயல்ல, வேடிக்கை விளையாட்டு என்பதை உணர்வீர்கள்.