மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 5 March 2019

விதிகளை உருவாக்க முடியுமா?

Find your own destiny..!

      Once five men were caught in a thick forest. The first man said... I will go left. Because my intuition said so. The second one said... I will go right. The third one said... I will go back the way we came. The fourth one said... I will go straight. We should move forward, the forest will end and we will go somewhere new. The fifth said... You are all wrong. There is a better solution with me. Wait for me. But all went in their path.

      He climbed the tallest tree. From above he saw the shortest way to exit. He could also see the order in which the others would exit.

      The man who went to the left hide himself in the thicket. He had to starve and fight with wild animals, he learned how to survive in the forest.

     The man who went to the right was robbed of everything and was forced to join them. The man who went back created a trail through the forest which soon became a road.

     The man who went straight became a pioneer. He went to the places where nobody else had been before. The man who climbed the tree became a guide. People went to him when they wanted to find the most efficient ways to deal with their problems.

These five wise men created their destiny by listening to their intuition. 

      ஒருமுறை ஐந்து நபர்கள் அடர்த்தியான காட்டில் சிக்கிக் கொண்டார்கள். அதில் முதலாவது மனிதன்.. நான் இடது புறம் செல்கிறேன். ஏனென்றால் என்னுடைய உள்ளுணர்வு அப்படி தான் கூறுகிறது. இரண்டாவது மனிதன்.. நான் வலது புறம் செல்கிறேன் என்று கூறினான். மூன்றாவது மனிதன்.. நான் வந்த வழியிலே திரும்பி செல்கிறேன் என்றான். நான்காவது மனிதன்.. நான் முன்னோக்கி செல்கிறேன், காடு முடிவிற்கு வந்து விடும், நாம் எங்கையாவது புதிய இடத்திற்கு செல்லலாம் என்றான். ஐந்தாவது மனிதன்.. நீங்கள் கூறுவது எல்லாம் தவறு. என்னிடம் ஒரு நல்ல தீர்வு இருக்கிறது. எனக்காக காத்திருங்கள் என்றான். ஆனால் அனைவரும் அவர்களது வழியில் சென்றார்கள்.

     அவர் ஒரு உயரமான மரத்தில் ஏறி காட்டிலிருந்து வெளியேற ஒரு குறுகிய வழியை கண்டு பிடித்தான். மற்றவர்கள் எவ்வாறு வெளியேறுகிறார்கள் என்பதையும் கவனித்தான். 

      இடது புறம் சென்ற அந்த நபர் புதருக்குள் ஒளிந்துக் கொண்டார். அவர் காடுகளில் பட்டினி கிடந்து காட்டு விலங்குகளுடன் சண்டையிட்டார், காட்டில் எப்படி உயிர் வாழ்வது என்று கற்றுக்கொண்டார். 

    வலது பக்கம் சென்ற மனிதரிடமிருந்து எல்லாம் கொள்ளையடிக்கபட்டு, அவர்களுடன் சேர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. வந்த வழியாக திரும்பி சென்ற மனிதன் காடு வழியாக ஒரு செல் தடத்தை உருவாக்கினான், விரைவில் அது ஒரு சாலையாக மாறியது.

       நேராக சென்ற மனிதன் ஒரு முன்னோடியானான். வேறு எவரும் முன்பு சென்றிடாத இடங்களுக்கு சென்றார். மரத்தில் ஏறியவன் ஒரு வழிகாட்டியாக ஆனான். மக்களின் பிரச்சினைகளை சமாளிக்க மிகவும் திறமையான வழிகளை கண்டுபிடிக்க விரும்பியபோது மக்கள் அவனிடம் சென்றார்கள். 

     இந்த ஐந்து ஞானிகளும் அவர்களுடைய உள்ளுணர்வைக் கேட்டு அவர்களுடைய விதிகளை உருவாக்கிக் கொண்டனர். 

Pages