இந்தக் கேள்வி ஓர் இண்டர்வியூவில் கேட்கப்பட்ட கேள்வி. மிகவும் எளிதானக் கேள்வியாகத் தோன்றினாலும் பலரும் இதற்குத் தப்பான விடையைத்தான் கூறினார்கள். கேள்வியையும் கேள்வி கேட்டவரையும் மனதில் நினைத்துக் கொண்டு இதற்கான பதிலைக் கூறுங்கள் பார்க்கலாம். ஒருவரிடம் ஒருவர் கேட்ட கேள்வியாக இதைக் கருத்தில் கொள்ளவும்.
"இப்போது மிகவும் எளிதான கேள்வி ஒன்றை உன்னிடம் கேட்கப் போகிறேன். ஒட்டகச் சிவிங்கிக்கு இரண்டு கண்கள். சரியா? குரங்குக்கும் இரண்டு கண்கள்தான். யானைக்கும் இரண்டு கண்கள் என்று எளிதாகச் சொல்லிவிடுவாய். சரி, நமக்கு எத்தனை கண்கள்?''
சரியான விடையைக் கண்டுபிடிக்க முடிகிறதா பாருங்கள்.
புதிருக்கு விடை:
நான்கு கண்கள். கேட்டவருக்கு இரண்டு கண்கள், பதில் சொல்லக் காத்திருந்தவருக்கு இரண்டு கண்கள். ஆக மொத்தம் நான்கு கண்கள். கேள்வியை மீண்டும் நன்றாகக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.