⭐ஆப்ரகாம் லிங்கன் அமெரிக்க குடியரசுத் தலைவராக இருந்தபோது அவருடைய காரை அவரே ஓட்டிச் செல்வது வழக்கம். ஒருநாள் அமெரிக்க பாராளுமன்ற கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஆப்ரகாம் லிங்கன் காரை ஓட்டிச் சென்றார்.
⭐வழியில் பள்ளத்தில் விழுந்த ஒரு பன்றிக்குட்டி வெளியேற முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. அந்த வழியில் சென்ற எவரும் பள்ளத்தில் தவிக்கும் பன்றிக்குட்டியை பார்க்கவில்லை. அப்படி பார்த்த சிலரும் அதைப்பற்றி கவலையில்லாமல் கடந்து சென்றனர்.
⭐ஆனால், அதைக்கண்ட ஆப்ரகாம் லிங்கனால் அந்த இடத்தை கடந்து செல்ல முடியவில்லை. தான் ஓட்டி வந்த காரை சாலையின் ஓரத்தில் நிறுத்திவிட்டு, பள்ளத்தில் தவித்த பன்றிக்குட்டியை தூக்கிக் கரை ஏற்றினார். அதன்பின் பாராளுமன்ற கூட்டத்திற்கு பயணம் மேற்கொண்டார்.
⭐ஆப்ரகாம் லிங்கன் பாராளுமன்றத்திற்குள் நுழையும்போது பாராளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருந்தது. 'தாமதமாக வந்ததற்கு அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும்" என்று சொல்லியபடி பாராளுமன்றத்திற்குள் நுழைந்தார்.
⭐ஆப்ரகாம் லிங்கனின் ஆடை முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. அதைக்கண்டு அனைவரின் முகத்திலும் அதிர்ச்சி. அதைப் புரிந்துகொண்ட ஆப்ரகாம் லிங்கன் வழியில் நடந்ததை விவரித்தார்.
⭐அதைக்கேட்ட அனைவரும் ஒரு ஐந்தறிவு ஜீவனான பன்றியை காப்பாற்றுவதற்காக ஆப்ரகாம் லிங்கன் பாடுபட்டதை சொல்லிப் பாராட்டினர்.
⭐அப்போது, 'ஒரு பன்றிக்குட்டியை நான் காப்பாற்றியதற்காக நீங்கள் என்னைப் பாராட்டுகிறீர்கள். ஆனால், இதில் என் சுயநலமும் அடங்கியிருக்கிறது" என்றார் ஆப்ரகாம் லிங்கன்.
⭐'இதில் என்ன சுயநலம் இருக்கிறது?" என்று அனைவரும் விழித்தனர்.
⭐'பள்ளத்தில் தவித்த பன்றியைப் பார்த்து என் மனம் தவித்தது. அந்தப் பன்றியைக் காப்பாற்றியதன் மூலம் என் மனம் நிம்மதி பெற்றது. அதனால் இது என் மனம் சம்பந்தப்பட்ட விஷயமாகிறது.
⭐அந்த நேரத்தில் அந்தப் பன்றியை நான் காப்பாற்றாமல் வந்திருந்தால், அந்த கவலையால் இந்தப் பாராளுமன்ற விவாதத்தில் என்னால் முழுமையாக ஈடுபட முடியாமல் போயிருக்கும். அதன் பின் சாலையோரங்களில் எந்தப் பன்றியைப் பார்த்தாலும், பள்ளத்தில் தவித்த பன்றியின் காட்சியே என் கண்ணில் தெரியும்.
⭐தக்க சமயத்தில் அந்தப் பன்றிக்கு உதவாமல் வந்து விட்டோமே என்று என் உள்மனம் உறுத்திக் கொண்டே இருக்கும். அந்த வடு என் வாழ்நாள் முழுமையும் நீடிக்கும். அத்தகைய சூழலில் இருந்து விடுபடுவதற்காகத்தான் அந்தப் பன்றியை நான் காப்பாற்றினேன். இதில் என்னைப் பாராட்டுவதற்கு ஒன்றுமே இல்லை என்று சொல்லி சிரித்தார்.