📺📺 வண்ணத் தொலைக்காட்சியை ஆர்.சி.ஏ. என்ற நிறுவனம் 1954-ம் ஆண்டு மார்ச் மாதம் 25-ந்தேதி முதன் முதலில் விற்பனைக்கு வெளியிட்டது. அதன் அகலம் 12 இன்ச் ஆகும்.📺📺
* 1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.
* 1821 - (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது.
* 1857 - பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
* 1911 - நியூயார்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.
* 1918 - பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
* 1941 - இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகோஸ்லாவியா இணைந்தது.
* 1947 - இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர்.
* 1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.