மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 12 March 2019

சின்ன வெங்காயத்தில் உள்ள வியக்கவைக்கும் சிறப்பான மருத்துவ குணங்கள்…!!!

    இது அளவில் சிறியதாக இருந்தாலும், இதில் உள்ள சத்துக்களும் மருத்துவ குணங்களும் அதிகமாக காணப்படக்கூடியது. சின்ன வெங்காயம் உடலுக்கு ஆரோக்கியத்தை தருவது மட்டுமல்லாமல், உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய ஆற்றல் கொண்டது.

     இதய நோய் உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் ஒரு சிறந்த மருந்து. இதய நோய் உள்ளவர்கள் சின்ன வெங்காயத்தை மென்று சாப்பிட்ட பின்பு, வெந்நீர் வைத்து குடித்து வந்தால் நோயின் தாக்கம் படிப்படியாக குறையும்.

      மாரடைப்பு உள்ளவர்கள், பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை நல்லெண்ணெய் விட்டு வதக்கி, தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு பிரச்சனைகள் நீங்கும் மேற்றும் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

   இன்றைய தலைமுறையினரின் மிகப்பெரிய பிரச்சனையே கூந்தல் பிரச்னை தான். பொடுகு தொல்லை, முடி கொட்டுதல் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் நல்ல பலன் தரும்.

    தலை பகுதியில் வழுக்கை விழுந்தவர்களுக்கும், முடி முளைக்காமல் இருப்பவர்களுக்கும் சின்ன வெங்காயத்தை தேய்த்து வந்தால், காலப்போக்கில் முடி முளைக்கும்.

     வயது முதிர்வை தடுத்து என்றும் இளமையோடு இருக்க சின்ன வெங்காயம் ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. சின்ன வெங்காயத்தை 15 நாட்களுக்கு ஒரு முறை ணெய் அல்லது நல்லெண்ணெயில் வதக்கி சாப்பிட்டு வந்தால் என்றும் இளமையாக இருக்கலாம்.

      நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சின்ன வெங்காயம் மிக சிறந்த மருந்தாகும். நமது உணவில் சின்ன வெங்காயத்தை சேர்த்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தி, சர்க்கரை நோய் பிரச்சனையில் இருந்து விடுதலை அளிக்கிறது.

    இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். இது இரத்த சம்பந்த்ப்பட்ட அனைத்து நோயகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

      உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு இது ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள கொழுப்புக்களை கறைக்கக் கூடிய ஆற்றல் கொண்டது.

       விரலில் நகச்சுற்று உள்ளவர்கள், ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.

      மாலைக்கண் நோய் உள்ளவர்கள் சிறிய வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் மாலைக்கண் நோய் குணமாகும். வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.

Pages