மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 5 March 2019

குற்ற உணர்ச்சியிலிருந்து விடுபட ஒரே வழி...

Owning Mistakes..!

     Simon lived with his grandfather. One night, he broke his grandfather′s favorite watch. 


    Simon got frightened to tell about it to his grandfather, he put the broken watch back into the box and placed the box back on the shelf. Afterwards, he went to sleep. He could not sleep in peace throughout the whole night. 

   The next morning, Simon got up early. He told his grandfather everything. The grandfather did not say anything to Simon. He went to the storeroom. 

    Having returned from the storeroom the grandfather said to Simon, ′I felt very angry when you had broken my precious watch. Your grandmother gifted it to me on our first wedding anniversary. But you need not to worry. Only the glass is broken. I shall have it replaced′. 

   Now Simon felt relaxed. After some time, his grandfather went into the kitchen and bought a glass of milk for him. 

   Simon′s grandfather further remarked, ′When I was at your age, I also broke my mother′s precious Flowerpot. I was scared to admit my mistake. But, when I went to confess, she said that she already knew about it′. 

Moral : It is brave to admit your mistake. You may be scared of being scolded. But it is the only way for you to be free from guilt. 

    சைமன் அவனுடய தாத்தாவுடன் வாழ்ந்து வந்தான். ஒரு இரவு, அவனுடைய தாத்தாவின் பிடித்த கடிகாரத்தை உடைத்து விட்டான். 

    சைமன் தனது தாத்தாவிடம் இதை பற்றிக் கூற பயந்துக் கொண்டு, உடைந்த கடிகாரத்தை மீண்டும் அதனுடைய பெட்டியில் வைத்து, பெட்டியை மீண்டும் அலமாரியில் வைத்தான். பின்னர், அவன் தூங்கச் சென்றான். அவனால் இரவு முழுவதும் நிம்மதியாக தூங்க முடியவில்லை.

   மறுநாள் காலையில் சைமன் சீக்கிரமாக எழுந்தான். தனது தாத்தாவிடம் சென்று எல்லாவற்றையும் கூறினான். தாத்தா அவனிடம் எதையும் கூறாமல் சரக்கு சேமிப்பு அறைக்குச் சென்றார்.

    சரக்கு சேமிப்பு அறையிலிருந்து வந்த பிறகு தாத்தா சைமனிடம், 'நீங்கள் என்னுடை மதிப்புமிக்க கடிகாரத்தை உடைத்தபோது நான் மிகவும் கோபப்பட்டேன். உன்னுடைய பாட்டி அந்த கடிகாரத்தை எங்களுடைய முதலாம் ஆண்டு திருமண நிறைவு நாளன்று எனக்கு பரிசாக கொடுத்தாள். ஆனால் நீ கவலைப் படவேண்டாம். கண்ணாடி மட்டும் தான் உடைந்திருக்கிறது. நான் அதை மாற்றிக் கொள்கிறேன்" என்றார். 

   சைமன் இப்போது நிம்மதியாக உணர்ந்தான். சிறிது நேரம் கழித்து, அவனுடைய தாத்தா சமையலறைக்குள் சென்று, அவனுக்காக கண்ணாடி குவளையில் பால் கொண்டு வந்தார்.

   மேலும் சைமனின் தாத்தா, 'நான் உன் வயதில் இருந்தபோது, என்னுடைய தாயின் மதிப்புமிக்க பூந்தொட்டியை உடைத்து விட்டேன். என் தவறை ஒப்புக்கொள்வதற்கு எனக்கு பயமாக இருந்தது. ஆனால், நான் ஒப்புக் கொண்டபோது என் தாய் எனக்கு ஏற்கனவே அதைப் பற்றி தெரியும் என்று கூறினாள்" என்று குறிப்பிட்டார். 

நீதி : உங்கள் தவறை ஒப்புக்கொள்வது மிகவும் தைரியம் தான். நீங்கள் திட்டுவதை நினைத்து பயப்படலாம். ஆனால் அது தான் நீங்கள் குற்றத்திலிருந்து விடுபட ஒரே வழியாகும்.

Pages