ஜோசப் பிரிஸ்ட்லி ஓர் ஆங்கிலேய வேதியியல் அறிஞர். இவருடைய பல கண்டுபிடிப்பு முயற்சிகளில் ஆக்சிசனைக் கண்டுபித்தது மிகவும் புகழ் வாய்ந்தது.
இவர் ஒரு சிறந்த ஆசிரியராகவும் மெய்யியல் அறிஞராகவும் திகழ்ந்தார். கார்பன்-டை-ஆக்சைடு பற்றிய இவருடைய ஆய்வுகளும் புகழ் பெற்றவை. ஆக்சிசனை இவருக்கும் முன்னால் கார்ல் வில்லெம் சீல் என்பார் கண்டுபிடித்தார் என்று தற்கால ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முக்கிய நிகழ்வுகள்:
முக்கிய நிகழ்வுகள்:
* 1811 - பிரித்தானியர் பிரெஞ்சுப் படைகளை லீசா என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தனர்.
* 1881 - ரஷ்யாவின் சார் மன்னன் இரண்டாம் அலெக்சாண்டர் தனது மாளிகைக்கு அருகில் நடந்த குண்டு வீச்சில் கொலை செய்யப்பட்டான். (ஜூலியன் நாட்காட்டியில் இது மார்ச் 1-ல் இடம்பெற்றது).
* 1900 - பிரான்சில் பெண்கள் மற்றும் சிறுவர்களின் வேலை நேரம் சட்டப்படி 11 மணி நேரமாகாக் குறைக்கப்பட்டது.
* 1908 - நெல்லைக்கு வந்த வ.உ.சி., சுப்பிரமணிய சிவா, பத்மநாப ஐயங்கார் கைது செய்யப்பட்டதால் திருநெல்வேலியில் எழுச்சி ஏற்பட்டது.
* 1921 - மங்கோலியா சீனாவிடம் இருந்து தனது விடுதலையை அறிவித்தது.
* 1940 - இந்திய விடுதலைப் போராட்ட வீரர் உத்தம் சிங் லண்டனில் காக்ஸ்டன் ஹால் என்ற இடத்தில் இடம்பெற்ற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து இந்தியாவின் முன்னாள் ஆளுநர் மைக்கேல் டயர் என்பவரை சுட்டுக்கொன்றார்.