மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday, 4 March 2019

பள்ளிகளில் குழந்தைகள் உரிமை மையம்


பள்ளிகளில், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க, இயக்குனரகம் அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அனுப்பி உள்ள சுற்றிக்கை:தொடக்க கல்வி இயக்குனரகத்தின் கீழ் செயல்படும், அனைத்து தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளும், குழந்தைகள் உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். தொடக்க பள்ளிகளில், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, மூன்று பெற்றோர், வட்டார வள மையத்தின் ஆசிரியர் பயிற்றுனர் ஒருவர், இந்த மையத்தில், உறுப்பினர்களாக இடம் பெற வேண்டும்.

எட்டாம் வகுப்பு வரையிலான நடுநிலை பள்ளிகளில், ஒரு ஆசிரியர், இரண்டு ஆசிரியைகள், மூன்று பெற்றோர், ஒரு வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் ஆகியோர், மையத்தின் உறுப்பினர்களாக இருக்க வேண்டும்.இந்த உத்தரவை பின்பற்றி, குழந்தைகள்உரிமை பாதுகாப்பு மையம் அமைக்க வேண்டும். பாதுகாப்பு மையம் அமைத்தது குறித்து, இயக்குனரகத்துக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Pages