மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 10 March 2019

அடடே…! இத சாதாரணமா நெனச்சீட்டோமே…!

     அன்றாட வாழ்வில், நமது சமையலில் காய்கறிகள் முக்கியமான இடத்தை பிடிக்கிறது. நமது அனைத்து சமையலிலும் தக்காளி ஒரு முக்கியமான இடத்தை பிடிக்கிறது.

    தக்காளி நமது உணவுகளில், பயன்படுத்தப்படுவதோடு, நமது உடலுக்கு ஆரோக்கியத்தை தருகிறது. அதுமட்டுமல்லாமல், நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தவும் இது உதவுகிறது.

    தக்காளியில், இரும்புசத்து, சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது.

      கண்ணில் பிரச்னை உள்ளவர்கள் தக்காளியை உணவில் சேர்த்து கொள்ளும் போது கண் பார்வையில் ஏதேனும் குறைகள் இருப்பின் அவற்றை சரி செய்ய உதவுகிறது.

    மேலும் இது கண் சம்பந்தப்பட்ட அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுத்து, ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

       தொண்டையில் புண் உள்ளவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த மருந்தாக பயன்படுகிறது. நமது உணவில் அதிகமாக கரம் மற்றும் அமில தன்மை உள்ள உணவுகளை சாப்பிடும் போது தொண்டையில் புண் ஏற்படுகிறது.

   இந்த பிரச்னை உள்ளவர்கள்,தக்காளியை உணவில் சேர்த்து சேர்த்து கொண்டால், தொண்டை புண்களில் இருந்து விடுதலை கொடுக்கிறது.

     உணவு ஜீரணம் ஆகுவதில் பிரச்னை உள்ளவர்கள் தக்காளியை தங்களது உணவில் சேர்த்துக் கொண்டால், செரிமான பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறலாம். மேலும் இது ஜீரண சக்தியை அதிகரிக்க செய்கிறது.
     தக்காளியை நமது உணவில் சேர்த்துக் கொள்ளும் போது, தொற்று நோய் ஏற்படும் அபாயத்தில் இருந்து நம்மை பாதுகாக்கிறது. மேலும், இது சொறி, சிரங்கு மற்றும் சரும நோய்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.

     வயிற்று புண் உள்ளவர்களுக்கு தக்காளி ஒரு சிறந்த மருந்தாகும். வயிற்று புண் உள்ளவர்கள் தக்காளியை தங்களது உணவில் அதிகமாக சேர்த்து கொண்டால், வயிற்று புண் விரைவில் ஆறும்.

     மேலும் இது வயிற்றில் உள்ள மற்ற பிரச்சனைகளை நீக்கி பூரண சுகமளிக்கிறது.

    நீரிழிவு நோய் உள்ளவர்கள் தக்காளியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்த பிரச்சனையில் இருந்து விடுதலை பெறலாம். மேலும், இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுகிறது

Pages