வயிற்றுக்குள் அதிசயம்..!
மனித இரைப்பை அதிசயமான உடல் உறுப்புகளில் ஒன்று. இங்கு மிக மிக அதிகமாக அரிக்கும் தன்மை கொண்ட ஹைட்ரோ குளோரிக் அமிலம் காணப்படுகிறது.
இது உணவுகளை செரிக்க உதவுகிறது. பருத்தி இழைகளைகூட செரிக்கும் ஆற்றல் கொண்டது இந்த அமிலம். ஆனால் அது இரைப்பை சுவரை அரிப்பதில்லை. அதற்கு காரணம் மியூகஸ் எனப்படும் இரைப்பையின் தோல் அடுக்குத்தான். கோழைபோல வழவழப்பாக காணப்படும் இந்த பகுதி இரைப்பையின் சுவர் பகுதியை ஹைட்ரோகுளோரிக் அமிலத்தில் இருந்து காக்கிறது.
அறிவியல் ஆயிரம் - உடலில் இருந்து மின்சாரம்..!
தற்போதைய நவீன வாழ்க்கை முறையில் இன்றியமையாத ஒன்றாக மின்சாரம் மாறிவிட்டது. அனல், நீர், காற்றாலை, சோலார், அணு என பல வகைகளில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில் நமது உடலில் ஏற்படும் வெப்பத்தை வைத்து, அதிலிருந்து சிறிய அளவில் மின்சாரம் தயாரிக்கும் சோதனையில் அமெரிக்க ஆய்வாளர்கள் ஈடுபட்டுள்ளனர். நாம் உடலில் அணியும் கம்பளி, பருத்தி ஆடையின் மூலம் உடலில் ஏற்படும் வெப்பத்தை 'தெர்மோபைல்" என்ற கருவி மூலம் மின்சாரமாக மாற்றும் தொழில்நுட்பம் குறித்து சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.