மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 31 March 2019

கனவை நனவாக்கிய புத்தகம்..!


       ஒருமுறை ஆப்ரகாம் லிங்கன், அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியான ஜார்ஜ் வாஷிங்டனின் வரலாறு பற்றி வீஸ் என்பவர் எழுதியிருந்த புத்தகத்தை படிக்க தேடினார். அப்போது அந்த வரலாறு, 'கிராப்போர்ட்" என்ற விவசாயிடம் இருப்பதை அறிந்து சுமார் 16கி.மீ தொலைவில் உள்ள அவரின் இல்லத்திற்கு சென்று அவரிடம் கெஞ்சி கூத்தாடி அந்த புத்தகத்தை வாங்கி வந்தார். வரும்போது கட்டாயம் படித்துவிட்டு திருப்பித் தருகிறேன் என்று உறுதி கூறி புத்தகத்தை வாங்கி வந்தார்.

     வீட்டிற்கு வந்த லிங்கன், மெல்லிய சுவாலையின் ஒளியில், ஒரே ராத்திரியில் அந்த புத்தகத்தை கிட்டத்தட்ட படித்து முடித்துவிட்டார். அந்த புத்தகத்தை வீட்டில் கூரைக்கு அருகில் சுவரில் செருகி வைத்திருந்தார். அன்றிரவு அந்த ஊரில் மழையும், காற்றும் பலமாக வீசியது.

    கூரை காற்றில் பஞ்சுப்பொதியாய் பிய்ந்து பறந்துவிட்டது. சுவரில் இருந்த புத்தகம் நனைந்து கிழிந்தும் போனது. காலையில் புத்தகத்தைப் பார்த்த ஆப்ரகாம் பதைபதைத்துப் போனார். ஆப்ரகாம் லிங்கனின் வருத்தத்திற்கு அளவே இல்லை. எப்படி அந்த விவசாயியை சந்தித்து பதில் சொல்வது என்ற கவலை நெஞ்சம் முழுவதும் பரவியது.

   நனைந்த புத்தகத்தை ஆப்ரகாம் லிங்கன் மறுநாள் காலை வெயிலில் உலர வைத்தார். அந்த கவலையிலும் கூட, அவர் ராத்திரி படிக்காமல் விடுபட்டுப் போன சில பக்கங்களையும் படித்து முடித்தார். பின் கிழிந்த புத்தகத்துடன் விவசாயியிடம் சென்றார். நடந்ததை அவரிடம் கூறி மன்னிப்பு கோரினார்.

      மேலும் 'என்னிடம் புத்தகத்திற்கு உரித்தான விலையை தருவதற்கு கூட பணம் இல்லை, எனவே உங்கள் நிலத்தில் உழைத்து அந்த புத்தகத்தின் பணத்தை கழித்து கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டு, அந்த புத்தகத்தின் மதிப்பான 75 சென்ட்டுக்கு மூன்று நாள் விவசாயியின் நிலத்தில் உழைத்தார். அதன் கடனையும் அடைத்தார்.

     ஆப்ரகாம் லிங்கன் படித்த அந்த புத்தகத்தின் பெயர்தான் 'வாஷிங்டனின் வாழ்க்கை" (The Life of Washington). அந்த புத்தகம் படித்த பின்னர்தான் ஆப்ரகாமுக்கு அமெரிக்காவின் குடியரசுத் தலைவராகும் எண்ணமும், ஆசையும் வந்தது. அவரின் கனவும் நனவாகி, ஆப்ரகாம் லிங்கனும், இருமுறை சட்டமன்றத்தில் வெற்றி பெற்று, குடியரசுத் தலைவர் பதவியை வகித்தார்.

Pages