மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 25 March 2019

🌹🌹 ரோஜாப்பூவை போல இரு🌹🌹

The Fragrance..!

    In a small town lived a wealthy merchant. He was very kind. He had only one son, who had unfortunately fallen into a bad company. One day, the merchant went to the saint and said, ′My son is the only cause of my worry. Please help me′. The saint replied, ′Send your son to my Ashram tomorrow morning. I will talk to him′. 


    Next morning, the merchant sent his son to the Ashram of the saint. There the saint asked the son to pluck a rose from the garden. Then the saint asked the son, ′Smell it and feel its fragrance′. The boy did so. Then saint showed a sack of wheat to the boy said, ′Keep the rose near the sack′. After an hour, the saint asked the boy to smell the rose again. ′How does it smell now?′ the saint asked the boy. The boy smelt the rose and said, ′It smells as good as before′. Then the saint said, ′Hmm! Now keep the rose near this sack of jaggery′. The boy did so. 

    After an hour, the saint asked the boy to smell the rose again. ′Is there any change in the fragrance?′ the saint asked the boy. ′No, it smells as fresh as before,′ replied the boy. Then the saint said, ′Boy, you should be like this rose, giving the fragrance to everyone but, at the same time not giving the bad smell to others. Your good qualities are your strength. You should not lose them in bad company′. From that day onwards, he was honest and kind like his father.

    ஒரு சிறிய நகரத்தில் ஒரு பணக்கார வியாபாரி ஒருவர் வாழ்ந்து வந்தார். அவர் மிகவும் அன்பானவர். அவருக்கு ஒரே ஒரு மகன் இருந்தான், அவன் துரதிருஷ்டவசமாக ஒரு மோசமான சகவாசத்தில் விழுந்து விட்டான். ஒரு நாள், வணிகர் துறவிடம் சென்று அவரிடம், 'என் மகன் தான் என்னுடைய கவலைக்கு ஒரே காரணம். தயவுசெய்து எனக்கு உதவுங்கள்" என்று கூறினார். பிறகு, துறவி 'நாளை காலை உன் மகனை ஆசிரமத்திற்கு அனுப்பு. நான் அவனிடம் பேசுகிறேன்" என்றார். 

    அடுத்த நாள் காலையில், வணிகர் தனது மகனை துறவியின் ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தான். துறவி அவனிடம் தோட்டத்தில் இருந்து ரோஜா ஒன்றை பறிக்கும் படி கூறினார். பின்னர் துறவி மகனிடம், 'அந்த பூவை முகர்ந்து பார்த்து அதனுடைய நறுமணத்தை உணர்" என்று கூறினார். சிறுவனும் அவ்வாறே செய்தான். பிறகு துறவி கோதுமை கோணிப்பையை மகனிடம் காண்பித்து 'அந்த கோணிப்பைக்கு அருகில் அந்த ரோஜாவை வை" என்றார். ஒரு மணி நேரம் கழித்து, துறவி மீண்டும் ரோஜாவை முகர்ந்து பார்க்கும் படி கூறினார். 'அது இப்போது எப்படி மணக்கிறது?" என்று கேட்டார், பையன் ரோஜாவை முகர்ந்து பார்த்து, 'இது முன் இருந்ததை விட இப்போது நன்றாக மணக்கிறது" என்றார். பின்னர் துறவி கூறினார், 'சரி! இப்போது வெல்ல மூட்டையின் அருகே இந்த ரோஜாவை வை" என்றார். பையணும் அவ்வாறே செய்தான்.

    ஒரு மணி நேரம் கழித்து, துறவி மீண்டும் ரோஜாவை முகர்ந்து பார்க்கும் படி கூறினார். 'வாசனையில் எதாவது மாற்றம் இருக்கிறதா?" என்று துறவி பையனிடம் கேட்டார், 'இல்லை, முன்பை விட புதிது போல் மணக்கிறது" என்று பதிலளித்தான். பிறகு துறவி, 'நீ இந்த ரோஜாவை போல் இருக்க வேண்டும். அனைவருக்கும் நல்ல வாசனையை கொடு, ஆனால் அதே நேரத்தில் மோசமான வாசனையை யாருக்கும் கொடுக்காதே. உன்னுடைய நல்ல குணங்கள் உன்னுடைய பலம். நீ மோசமான சகவாசத்தால் அவற்றை இழந்து விடக் கூடாது" என்று பையனிடம் கூறினார். அந்த நாளில் இருந்து, அவன் தனது தந்தை போல நேர்மையாகவும், அன்பாகவும் இருந்தான்.

Pages