மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday, 8 March 2019

கூகுளின் குழந்தைகளுக்கான டீச்சர் ஆப்


    கூகுள் நிறுவனம் குழந்தைகளின் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் அம்சம் கொண்ட ஆண்ட்ராய்டு செயலியை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. போலோ என அழைக்கப்படும் இந்த செயலியை கூகுளின் ஸ்பீச் மற்றும் டெக்ஸ்ட்-டு-ஸ்பீச் தொழில்நுட்பத்தில் இயங்குகிறது.  


     குழந்தைகளுக்கு பாடம் கற்பிக்கும் கூகுள் அசிஸ்டண்ட் டியா என அழைக்கப்படுகிறது. இது குழந்தைகளுக்கு உச்சரிப்பை பொறுமையாக சொல்லிக் கொடுக்கிறது. குழந்தைகள் உச்சரிப்பில் தவறு செய்யும் போது அவர்களை சரி செய்கிறது. குழந்தைகளுக்கு தனிப்பட்ட டியூஷன் டீச்சர் போன்று வாசிக்க சொல்லிக் கொடுக்கும் வகையில் போலோ ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

    முதற்கட்டமாக 40 ஆங்கில கதைகளும், 50 இந்தி கதைகளை போலோ ஆப் கொண்டிருக்கிறது. குழந்தைகளில் வாசிக்கும் திறனுக்கு ஏற்ப ஒவ்வொரு கதைகளிலும் கடினத்தன்மை மாறுபடும். இத்துடன் செயலியினுள் சுவாரஸ்ய வார்த்தை விளையாட்டுகளில் பங்கேற்று குழந்தைகள் இன்-ஆப் ரிவார்டு மற்றும் பேட்ஜ்களை வென்றிட முடியும்.



     பல்வேறு குழந்தைகள் ஒன்றிணைந்து ஒரே செயலியில் பங்கேற்று, அவர்களது தனிப்பட்ட திறமையை கண்டறிந்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. தற்சமயம் தியா ஆங்கிலம் மற்றும் இந்தி மொழியில் இருக்கும் சொற்களை மட்டும் வாசிக்கும் திறன் கொண்டிருக்கிறது. எனினும், விரைவில் மற்ற மொழிகளில் இயங்கும் படி இந்த செயலியில் அப்டேட் வழங்கப்படும் என தெரிகிறது.

   செயலி ஆஃப்லைனிலும் சீராக இயங்குகிறது. இதனால் குழந்தைகள் படிப்பதில் மட்டும் கவனம் செலுத்த முடியும். குழந்தைகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தனிப்பட்ட விவரங்கள் குறிப்பிட்ட சாதனத்தினுள் சேமிக்கப்படுகிறது. போலோ ஆப் தற்சமயம் குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருக்கு இந்தியா முழுக்க பீட்டா முறையில் கிடைக்கிறது.

    கூகுளின் போலோ ஆப் தற்சமயம் கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கிறது.

Pages