மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 11 March 2019

வார்த்தைகளை விட சத்தமாக பேசுபவை...


A Story about Sita..!

        Sita used to go school by bicycle every day. She was a kindhearted young girl always willing to help people. One morning, as she was on her way to school, she saw a blind man trying to cross the road in the midst of traffic. There was no one to help him.

     Sita, who saw this, ran towards to the blind man, took hold of his white cane and told him to walk with her. She waved her hand at all the vehicles, signaling them to stop. All the vehicles gave way for them to cross the road. The blind man thanked Sita.

     Sita′s class teacher saw this and felt very proud of her student. That day in school teacher told the whole class about Sita′s helping tendency and asked the other students to applaud her. Teacher told the other students that they should follow Sita in helping others.

Moral : Actions speak louder than words.

    சீதா தினமும் மிதி வண்டியில் பள்ளிக்குச் செல்வாள். அவள் எப்போதும் மக்களுக்கு உதவ விரும்பும் மனமுடைய ஒரு அன்பான இளம் பெண். ஒருநாள் காலையில், பள்ளிக்குச் செல்லும் வழியில், ஒரு கண் பார்வையற்ற மனிதன், போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் சாலையை கடக்க முயற்சிப்பதை பார்த்தாள். அவருக்கு உதவ யாரும் இல்லை.

    இதைக் கண்ட சீதா, கண் பார்வையற்ற மனிதனை நோக்கி ஓடிச் சென்று, அவருடைய வெள்ளைப் பிரம்பை பிடித்துக் கொண்டு, அவளுடன் நடக்கும்படி கூறினாள். எல்லா வாகனத்தையும் நிறுத்தும் படி தன்னுடைய கையை அசைத்து சைகை காட்டினாள். எல்லா வாகனங்களும் அவர்கள் சாலையை கடந்துச் செல்ல வழி விட்டன. கண் பார்வையற்ற மனிதன் சீதாவிற்கு நன்றி கூறினார்.

     இதைக் கண்ட சீதாவின் வகுப்பு ஆசிரியர் அவளை நினைத்து மிகவும் பெருமிதம் கொண்டார். அன்றைய நாள் பள்ளியில் ஆசிரியர் முழு வகுப்பிடமும் சீதாவின் உதவி மனப்பான்மையை கூறி அவளை மற்ற மாணவர்கள் பாராட்டும் படி கூறினார். மேலும் ஆசிரியர் சீதாவின் உதவி மனப்பான்மையை பின்பற்ற வேண்டும் என்று மற்ற மாணவர்களிடமும் கூறினார்.

நீதி : நம்முடைய நடவடிக்கைகள் வார்த்தைகளை விட சத்தமாக பேசும்.

Pages