மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Tuesday 19 March 2019

பாப்கார்ன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மையா ??



      பாப்கார்ன் என்பது சோளப்பொறியை தான் குறிக்கும். சோளத்தினால் உருவாகும் உணவு போல் தான் இந்த பாப்கார்ன். இந்த பாப்கார்னால் நமது உடலில் ஏற்படும் பல நோய்கள் தடுக்கப்படுவது, பல நோய்களில் இருந்தும் விடுதலை பெற முடியும். 


பாப்கார்னில் உள்ள சத்துக்கள்

        உடலுக்கு நல்லதல்ல என ஒதுக்கும் உணவு பொருளான பாப்கார்னில், வைட்டமின் பி காம்ப்ளக்ஸ், மாங்கனீசு, நார்சத்து, பாலிபீனாலிக் கூறுகள் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் உள்ளது.

       பாப்கார்னை நாம் சாப்பிடும் போது குடல் இயக்கம் சீராக இயங்க உதவுகிறது. பாப்கார்னின் தவிட்டு நார்சத்து அதிகமாக இருப்பதால், குடலின் இயக்கம் சீராகவும், குடல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வராமலும் தடுக்கிறது.

     மேலும், மலசிக்கல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதில் இருந்து நம்மை பாதுகாக்கிறது.

       பாப்கார்னில் உடலில் உள்ள கேட்ட கொழுப்புக்களை கரைக்கக் கூடிய ஆற்றல் அதிகமாக உள்ளது. ஒரு முழு தானியமான பாப்கார்ன் மூலம் கிடைக்கும் நார்ச்சத்துக்கள், இரத்த குழாய்களிலும், தமனிகளில் படித்திருக்கும் அதிக அளவிலான கொழுப்புக்களை வெளியேற்றுகிறது.

     மேலும் இது உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய நோய், மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வராமல் தடுக்கிறது.

      பாப்கார்னை நாம் தொடர்ந்தது சாப்பிட்டு வந்தால், புற்றுநோய் போன்ற அபாயகரமான நோய்கள் உண்டாக்கும் அடிப்படை கூறுகளை எதிர்த்து கூடிய ஆற்றல் உள்ளது. ஏனென்றால், இதில் உள்ள ஆண்டி ஆக்சிடென்டின் முக்கிய பணியே இது தான்.

      உடல் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு பாப்கார்ன் ஒரு சிறந்த உணவாகும். ஏனென்றால் இதில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது.

       இந்த சத்து வயிற்றை நிரப்புவதோடு, பசியை தூண்டும் ஹார்மோனை சுரக்காமல் தடுக்கிறது. இதனால் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் இதனை அதிகமாக சாப்பிடலாம்.

Pages