சர்வதேச அளவில் பணியில் பெண்கள்
61.5% பெண்கள் சேவைத் துறைகளில் பணிபுரிகின்றனர்.
தொழிற்சாலைகளில் பணிபுரிவோர் விகிதம் 13.5. விவசாயத்தில் 25% பெண்கள் ஈடுபடுகின்றனர்.
பாராளுமன்றத்தில் பெண்களின் பங்களிப்பு 23%
பெண் சிஈஓக்கள், தலைமை அதிகாரிகள் வெறும் 4% மட்டுமே இருக்கின்றனர்.
முறைசாரா வேலைவாய்ப்பு
முறைசாரா வேலைவாய்ப்பின் கீழ் (வீட்டு வேலை செய்பவர்கள், தெரு வியாபாரிகள், பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், வேலை கிடைக்கும்போது செய்பவர்கள்) தெற்காசியாவில் 95% பெண்கள் பணிபுரிகின்றனர்.
புலம்பெயர் பெண்கள்
புலம்பெயர்ந்த பெண்களில், வீட்டுவேலை செய்யும் 57% பெண்களுக்கு வேலை நேரத்துக்கு எந்தவித உச்சவரம்பும் நிர்ணயிக்கப்படுவதில்லை.
பெண்களுக்கு எதிரான வன்முறை
ஐரோப்பிய கூட்டமைப்பில் உள்ள பெண்களில் 55% பேர், தங்களுடைய 15 வயதில் இருந்து ஒரு முறையாவது பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப் படுகின்றனர். இதில் 32% பெண்கள் தங்களின் பணியிடங்களில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாகின்றனர்.
சட்டபூர்வ தடைகள்
பாலின பாகுபாட்டுக்கு எதிராக 67 நாடுகளில் மட்டுமே சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்பட்டு இருக்கின்றன. 18 நாடுகளில், மனைவி பணிபுரிவதைக் கணவன் சட்டபூர்வமாக எதிர்க்க முடியும்.
சமூக பாதுகாப்பு
பணி ஓய்வு பெற்ற பிறகு, முறையான ஓய்வூதியத்தொகையை 65% ஆண்கள் பெறுகின்றனர். பெண்களைப் பொருத்தவரையில் 35% பேருக்கே முறையான ஓய்வூதியம் கிடைக்கிறது.
பெண்களின் முன்னேற்றத்தில் ஐ.நா.
பெண்களின் முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றி வரும் ஐக்கிய நாடுகள் சபை, 2030-க்குள் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையே சமத்துவத்தை உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கென சில திட்டங்கள் ஐக்கிய நாடுகள் சார்பில் உருவாக்கப்பட்டுள்ளன. இதன்படி,
* 2030-ம் ஆண்டில், அனைத்து சிறுமிகளும் முழுவதும் சுதந்திரமாக இருக்க வேண்டும்.
* தரமான மற்றும் சமத்துவக் கல்வி அவர்களுக்குக் கிடைக்க வேண்டும். பயனுள்ள கற்றலை அவர்கள் அனுபவிக்க வேண்டும்.
* உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நடக்கும் அனைத்து விதமான இனப் பாகுபாட்டையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்.
* சிறுமிகள் மற்றும் பெண்களுக்கு எதிராக பொது மற்றும் தனிப்பட்ட இடங்களில் நடக்கும் கடத்தல், பாலியல் ரீதியான துன்புறுத்தல் மற்றும் பிற வகை அத்துமீறல்கள் ஆகிய வன்முறைகளை ஒழிக்க வேண்டும்.
* குழந்தைத் திருமணங்கள், கட்டாயத் திருமணம், பெண் உறுப்பு சிதைப்பு உள்ளிட்ட கொடூரச் செயல்களை அகற்ற வேண்டும்.
இவை அனைத்தும் நிறைவேறும் பட்சத்தில் பெண்களின் நிலை இன்னும் பல படிகள் உயரும். வாழ்வு செழிக்கும்.
🌹🌹🌹🌹🌹🌹🌺🌹