மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday 30 March 2019

🍧🍨🍧எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா?🍨🍧🍨🍧🍦


    எந்த Brand-ன்னு பார்த்து வாங்கி சாப்பிடுங்க!! இல்லேன்னா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிற கதைதான்!!

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.

1. ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் 'ஐஸ்க்ரீம்' என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்பு களும் விற்கப்படுகின்றன.

2. ஏன் frozen desert தயாரிப்பினை அதிகம் உண்ணக் கூடாது என்று ஆராய்ந்தால் frozen desert என்று சொல்லக் கூடிய அந்த வகையான ஐஸ்க்ரீம்களில் கெட்ட கொழுப்பு சத்தானது அதிகமாக உள்ளது. கால்சியம் இந்த frozen desert ஐஸ்க்ரீம் வகைகளில் ஒரு சதவீதம் கூட இல்லை.

3. இந்த Frozen Dessert கூறப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் வகைகளில் saturated fat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளை விக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான Frozen Dessert ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப் படுகின்றது.

     எனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன் படுத்தவும்.

Pages