மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Friday 22 March 2019

கையளவே உள்ள நெல்லிக்கனியில் இத்தனை அதிசயங்களா? ...

தேன் நெல்லி !!

    மூத்தோர் சொல்லும் முதிர்ந்த நெல்லிக்காயும் முதலில் கசக்கும் பிறகு இனிக்கும் என்று மூத்தோர் சொல்லுக்கு ஒப்பிட்டு பழமொழி வடிவிலும், செய்யுள் வடிவிலும் இதன் பயன் பற்றி சொல்லி இருக்கின்றனர் நம் முன்னோர்கள்.

      புறநானூறு செய்யுளில் அதியமான் என்னும் அரசன் தனக்கு கிடைத்த சாகாவரம் தரும் நெல்லிக்கனியை ஒளவை பாட்டிக்கு தந்ததாகவும் அதனால் அவர் நீண்ட காலம் வாழ்ந்ததாகவும் செய்யுள் கூறுகிறது. இச்செய்யுளில் நெல்லிக்கனி சாகாவரம் தரும் என குறிப்பிடப்பட்டிருக்கிறது.

   நெல்லிக்கனி சாகாவரம் தருகிறதோ, இல்லையோ உடல் உள்ளவரை உடலுக்கு ஏராளமான பயன்களை தரும் என்பது நாம் மறுக்க முடியாத உண்மை.


நெல்லிக்காய் உடலுக்கு அப்படி என்ன பயன் தருகிறது?

   எந்த ஒரு காய்கறி, பழங்களிலும் இல்லாத அளவிற்கு வைட்டமின் சி 600 மி.கி, கால்சியம் 50 மி.கி, பாஸ்பரஸ் 20 மி.கி, இரும்புச்சத்து 1.2 மி.கி அளவுகளில் சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன.

   உடலில் உள்ள மாசுக்களை வெளியேற்றி உடலை இளமையாகவும், பளபளப்புடனும் வைக்கிறது.

ஜீரண கோளாறுகளை தடுக்கிறது.

   தலையில் ஏற்படும் முக்கிய பிரச்சனைகளான முடி உதிர்வு, இளநரை, வழுக்கை போன்றவற்றிற்கு தீர்வு தருகிறது.

  ஆஸ்துமா, மலச்சிக்கல், நீரிழிவு நோய் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை கொண்டது.

  இரத்தக்குழாய்களில் உள்ள அடைப்பை கரைக்கிறது.

  கண்ணின் அனைத்து குறைபாடுகளையும் குணப் படுத்துகிறது.

   உடலுக்கு குளிர்ச்சி, மூளை வளர்ச்சி, எடையை குறைக்க, இளமையாக இருக்க உதவுகிறது.

   இத்தனை சிறப்புகளும், நன்மைகளும் கொண்ட நெல்லிக்கனி அப்படியே உண்பதற்கு மாற்றாக தேனில் ஊறவைத்து உண்ணும்போது இதன் அத்தனை நன்மைகளும், பயன்களும் இன்னும் இரட்டிப்பாகிறது.

Pages