மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday, 27 March 2019

வரலாற்றில் இன்று - உலக திரையரங்க தினம் !

உலக திரையரங்க தினம் 
  ஒவ்வொரு ஆண்டும் உலக திரையரங்க தினம் மார்ச் 27ஆம் தேதி சர்வதேச திரையரங்க நிறுவனம் மூலம் கொண்டாடப்படுகிறது.


   யுனெஸ்கோவின் முயற்சியால் சர்வதேச திரையரங்க நிறுவனம் 1948ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. யுனெஸ்கோ மற்றும் அதன் கலாச்சாரத் துறையின் சார்பாக 1961ஆம் ஆண்டிலிருந்து இத்தினம் கொண்டாடப்படுகிறது. 

வில்லெம் ரோண்ட்கன்
    எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் 1845ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தில், லென்னெப் என்ற ஊரில் பிறந்தார்.

   இவர் அழுத்தம் குறைந்த வளிமங்களில் எவ்வாறு மின்னிறக்கம் நிகழ்கிறது என ஆய்வுகள் செய்தார். அப்பொழுது வெற்றிடக்குழாய் உபகரணங்களின் பல்வேறு வெளி விளைவுகளை ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது உருவாகும் எதிர்முனை கதிர்கள் ஒளிர்வதை கண்டார். 

   மேலும், இவர் இருட்டு அறையில், சில சோதனைகளை செய்து பார்த்தப்போது இந்த ஒளிர்தலுக்கு கண்ணுக்கு தெரியாத ஒரு வகை கதிர்களே காரணம் என்று அறிந்தார். அதற்கு எக்ஸ் கதிர்கள் என்று பெயரிட்டார். 

   இதை அவர் நவம்பர் 8, 1895ஆம் ஆண்டு கண்டறிந்தார். இக்கண்டுபிடிப்பிற்காக இவருக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வழங்கப்பட்டது.

   கதிர்வீச்சு மருத்துவ சோதனையின் தந்தை என போற்றப்படும் இவர் தன்னுடைய 77வது வயதில் (1923) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்:

👉 1513ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி ஜுவான் பொன்ஸ் டி லெயோன், வட அமெரிக்காவை (புளோரிடா) கண்டுபிடித்தார்.

🌀 1968ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி விண்வெளிக்கு சென்ற முதல் மனிதர் யூரி ககாரின் மறைந்தார்.



Pages