சிவனுக்கு உரிய நாளான மகாசிவராத்திரி இந்த வருடம் மார்ச் 4-ஆம் தேதியான (திங்கட்கிழமை) இன்று கொண்டாடப்படுகிறது. இந்நாளில் சிவபெருமானை நினைத்து விரதமிருந்தால் நினைத்த காரியம் கைக்கூடும். மேலும், கஷ்டங்கள் நீங்கி மகிழ்ச்சியுடன் வாழலாம்.
மகாசிவராத்திரியில் செய்யக்கூடாதவை :
🌏பகலில் தூங்கக்கூடாது.
🌏சிவராத்திரி அன்று கண் விழிக்க வேண்டும் என்பதற்காக, நம்முடைய கவனங்களை வேறு பக்கம் கொண்டு செல்வது தவறாகும்.
பலன்கள் :
சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கும் என்பது நம்பிக்கை.
சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம்.
மனிதர்களுக்கு ரொம்ப முக்கியமானது இரண்டு விஷயம். உணவு, நல்ல தூக்கம், இந்த இரண்டையும் விலக்கி, சிவனுக்காக நாம் விரதமிருப்பது தான் இந்த நாளின் நோக்கமாகும். உணவையும், உறக்கத்தையும் விலக்கினால் புலன்கள் தானாகவே அடங்கும். அப்போது இறையுணர்வு பெற முடியும். நினைத்த காரியம் சித்தி ஆகும்.
மகாசிவராத்திரி அன்று விரதம் இருந்தால் அசுவமேதயாகம் செய்த பலன் கிடைக்கும் என்று ஆகமங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விரதத்தை 24 அல்லது 12 வருடங்களாவது மேற்கொள்ள வேண்டும். அன்றைய தினம் இரவு முழுவதும் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ சிவ சிந்தனையுடன் இருக்க வேண்டும். இப்படி செய்வதால் வாழ்வில் எல்லா வளமும் வந்து சேரும்.