மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Monday 4 March 2019

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் !

தேசிய தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம்

  இந்தியாவில் தொழிலாளர்கள் பாதுகாப்பு தினம் மார்ச் 4ஆம் தேதி அனுசரிக்கப்படுகிறது.

  தொழிலாளர்கள் விபத்துகளின்றி பணிபுரிந்திடவும், பாதுகாப்பு உணர்வுடனும், உடல்நலன் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் பணி செய்திட வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே அனைத்து தொழிற்சாலைகளிலும் இத்தினம் கொண்டாடப்படுகிறது.

கர்ரெட் மார்கன் 

   பல கருவிகளை கண்டறிந்த அமெரிக்க கண்டுபிடிப்பாளர் கர்ரெட் அகஸ்டஸ் மார்கன் 1877ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அமெரிக்காவின் கென்டக்கி மாநிலத்தில் பிறந்தார்.

    மார்கன், சிறுவயதிலேயே படிப்பை கைவிட்டார். பல இடங்களில் கூலி வேலை செய்து வந்த வருமானத்தில் ஒரு ஆசிரியரிடம் டியூஷன் சேர்ந்து கல்வி கற்றார். 

    இவர் தையல் இயந்திரத்தின் பெல்ட்டை கட்டுவதற்கான வழியை கண்டுபிடித்த பிறகு, மிகவும் பிரபலமானார். 1907ஆம் ஆண்டு தையல் இயந்திரம், ஷூ பழுது பார்க்கும் கடையை தொடங்கினார். படிப்படியாக பல்வேறு தொழில்களில் கால் பதித்தார்.

   1914ஆம் ஆண்டு புகை, நச்சு வாயுக்களிடம் இருந்து காப்பதற்கான பாதுகாப்பு கவசத்தை வடிவமைத்து காப்புரிமை பெற்றார். சுருள் கூந்தலை நேராக்கும் கிரீம், சீப்பு, கூந்தல் சாயம் போன்ற அழகுசாதனப் பொருட்களைக் கண்டுபிடித்தார்.

   எளிமையான, திறன் வாய்ந்த டிராஃபிக் கன்ட்ரோல் சிக்னல் முறையைக் கண்டறிந்தார். இதை பயன்படுத்தி விபத்துகள் கட்டுப்படுத்தப்பட்டது. இதற்கும் காப்புரிமை பெற்றார்.

   '100 கிரேட்டஸ்ட் ஆப்பிரிக்கன் அமெரிக்கன்ஸ்" என்ற புத்தகத்தில் இவரது பெயர் இடம்பெற்றுள்ளது.

    தன் உழைப்பாலும், திறமையாலும் பல கருவிகளைக் கண்டறிந்து, பல சாதனைகளை படைத்த கர்ரெட் மார்கன் தனது 86வது வயதில் (1963) மறைந்தார். 

முக்கிய நிகழ்வுகள்
   1980ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி இந்திய டென்னிஸ் விளையாட்டு வீரர் ரோகன் போபண்ணா பிறந்தார்.

Pages