மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday 3 March 2019

வரலாற்றில் இன்று... உலக வனவிலங்குகள் தினம்

உலக வனவிலங்குகள் தினம்

     உலக வனவிலங்குகள் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 3ம் தேதி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

    வன விலங்குகள் மற்றும் வனத்தில் உள்ள தாவரங்களைப் பாதுகாப்பது அவற்றின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது இந்நாளின் நோக்கமாகும்.



அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 

      தொலைபேசியை கண்டறிந்த அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் 1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் பிறந்தார். இவரது குடும்ப நண்பரான அலெக்ஸாண்டர் கிரகாம் என்பவரின் பெயரையும் இணைத்து அலெக்ஸாண்டர் கிரகாம் பெல் என்று இவருக்குப் பெயர் சூட்டப்பட்டது.


    பியானோவில் ஒலி எழுப்பி மின்சாரம் மூலமாக அந்த இசையை ஒரு குறிப்பிட்ட தொலைவுக்கு அனுப்பினார். அதேபோல பேசுவதையும் அனுப்பலாமே என்று சிந்தித்து ஆராய்ச்சியில் இறங்கினார்.


    1876ஆம் ஆண்டு உலகிலேயே முதன்முதலாக தனது உதவியாளர் வாட்சனிடம் தொலைபேசியில் பேசினார். பிறகு 1877ஆம் ஆண்டு வாட்சனுடன் இணைந்து பெல் தொலைபேசி கம்பெனியை தொடங்கினார். 


    ஏறக்குறைய 60 கண்டுபிடிப்பு களுக்கான காப்புரிமையை பெற்றார். தகவல் தொடர்பில் புரட்சியை ஏற்படுத்திய இவர் தனது 75வது (1922) வயதில் மறைந்தார். 

ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா


    இந்திய தொழில்துறையின் தந்தை ஜம்ஷெட்ஜி நுஸர்வான்ஜி டாடா 1839ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி குஜராத் மாநிலம், நவசாரி என்ற இடத்தில் பிறந்தார்.

    தந்தையின் நிறுவனத்தில் 29வயது வரை வேலை செய்து வந்தார். 1868ஆம் ஆண்டு ரூ.21,000 முதலீட்டில் சொந்தமாக ஒரு வணிக நிறுவனத்தை தொடங்கினார். 

     தொடர்ந்து பல ஆலைகளை நிறுவினார். இரும்பு மற்றும் எஃகு நிறுவனம், உலகத் தரம் வாய்ந்த கல்வி நிறுவனம், தனித்துவம் வாய்ந்த ஹோட்டல் மற்றும் நீர் மின் நிலையம் ஆகியவற்றை நிறுவ வேண்டும் என்று தன் வாழ்வை அர்ப்பணித்துக்கொண்டார்.

        இவருடைய வாழ்நாள் கனவான ஹோட்டல் கனவு நிஜ வடிவம் பெற்றது. மும்பையில் 1903ஆம் ஆண்டு தாஜ் ஹோட்டல் தொடங்கப்பட்டது. தற்போது இந்தியாவின் மிகப்பெரிய தொழில் சாம்ராஜ்ஜியமாக திகழும் டாடா குழுமத்துக்கு அஸ்திவாரமாக இருந்த இவர் தனது 65வது வயதில் (1904) மறைந்தார். 


முக்கிய நிகழ்வுகள்

 1707ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி மொகலாய பேரரசர் ஒளரங்கசீப் மறைந்தார்.

Pages