மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Saturday, 30 March 2019

விக்கல் ஏன் வருகிறது?

The Love Test..!

     One day, two colleagues Henry and Peter were having their lunch. Just then Henry started having hiccups. When Peter asked him the reason, he replied that it was due to his wife′s love. When his wife think about him a lot, he had loud hiccups.

    Peter thought how lucky Henry was to have such a loving wife. He hurried back to his house and started scolding his wife for not thinking about him. Then he narrated to her the whole matter. His wife understood where the problem was.

  Next day, she mixed a lot of chilli powder in the lunch. When Peter sat down to eat, he had hiccups. He thought, ′Oh dear! Don′t think about me so much′. Henry laughed on seeing Peter′s condition.

   ஒரு நாள் சக ஊழியர்களான ஹென்றியும் பீட்டரும் தங்கள் மதிய உணவை சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது ஹென்றிக்கு விக்கல் எடுக்க தொடங்கியது. பீட்டர் அவனிடம் காரணத்தை கேட்ட போது, அது அவருடைய மனைவியின் அன்பு காரணமாக தான் என்று பதிலளித்தார். அவருடைய மனைவி அவரை அதிகமாக நினைக்கும் போது, உரத்த விக்கல்கள் ஏற்படும் என்று கூறினார்.

    அத்தகைய அன்பான மனைவி ஹென்றிக்கு இருப்பதை நினைத்து ஹென்றி மிகவும் அதிர்ஷ்டசாலி என்று பீட்டர் நினைத்தார். அவர் தனது வீட்டிற்கு விரைந்து சென்றார், அவரை பற்றி நினைக்கவில்லை என்பதற்காக அவருடைய மனைவியைத் திட்ட தொடங்கினார். பின்னர் அங்கு நடந்த முழு விஷயத்தையும் கூறினார். சிக்கல் எங்கே இருக்கிறது என்று அவருடைய மனைவிக்கு புரிந்தது.

    அடுத்த நாள், மதிய உணவில் நிறைய மிளகாய் தூளை கலக்கினாள். பீட்டர் சாப்பிட உட்கார்ந்தபோது, அவருக்கு விக்கல்கள் வந்தது. ஓ அன்பே! என்னை மிகவும் நினைக்காதே என்று நினைத்தார். பீட்டரின் நிலைமையை நினைத்து ஹென்றி மிகவும் சிரித்தார்.

Pages