3 ஆயிரம் அடிகளுக்கு அப்பால் ஒரு மனிதன் இருந்தாலும், மோப்ப சக்தி மூலம் யானையால் அறிந்து கொள்ள முடியும்.
அரை மைல் தூரத்தில் உள்ள ஆப்பிள் செடியின் பூவாசனையை தேனீயால் நுகர முடியும்.
ஒரு மைலுக்கு அப்பால் இருக்கும் தண்ணீரைக்கூட மோப்பசக்தியால் ஒட்டகம் கண்டுபிடித்து விடும்.
நீர் யானைக்குட்டி பிறந்தவுடன் நீந்தத் தொடங்கி விடும்.
பிரிஸ்டாக்கி எனும் வான்கோழி இன பறவைக்குஞ்சு முட்டையிலிருந்து வெளிவந்ததும் பறக்க ஆரம்பித்துவிடும்.
பறவைகளில் புத்திசாலித்தனம் மிக்கது காகம்.
துருவக்கரடிகள் வெள்ளை நிற ரோமத்துடன் பார்க்க அழகாகத் தோன்றும், ஆனால் அதன் தோல் கருப்பு நிறமுடையது. கருப்பு அதிக வெப்பத்தை உள்வாங்கும் திறன் கொண்டது. குளிர் பிரதேசத்தில் வசிக்கும் அவற்றுக்கு அதிகமான வெப்பத்தை இந்த கருப்புத்தோல் கிரகித்துத் தருவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
நாம் கைகளை உரசிக் கொண்டால் வெப்ப ஆற்றல் வெளிப்படுவதை உணரலாம். அது போல தேனீக்கள் சிறகடிக்கும்போதும் குறிப்பிட்ட அளவு வெப்ப ஆற்றல் வெளிப்படுகிறது. ஒரு தேனீயின் சிறகடிப்பில் எவ்வளவு வெப்பம் வெளிப்பட்டுவிடப்போகிறது என்று நாம் சுலபமாக நினைக்கலாம். ஆனால் தேனீக்கள் சிறகடித்தால் 7 வாட்ஸ் பல்பு எரிய வைக்கத் தேவையான வெப்ப ஆற்றல் கிடைப்பதாக ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.