இந்நூலை இயற்றியவர் திருவள்ளுவர். திருவள்ளுவரை நாயனார், தேவர், தெய்வப்புலவர், பெருநாவலர், பொய்யாமொழிப் புலவர் என்றும் பல சிறப்புப்பெயர்களால் அழைப்பர்.
இந்நூல் அறம், பொருள், இன்பம்( காமம்) என்னும் முப்பாலையும் அழகாக எடுத்துரைக்கிறது.
வாழ்கையின் அனைத்து பகுதிகளையும் எடுத்துரைக்கும் ஒரு சிறந்த வாழ்வியல் நூலாகும்.
சாதி, மதம், மொழி, நாடு என்று வேறுபாடு இல்லாமல் மக்கள் அனைவருக்கும் பொருந்துவதாக உள்ளதால் உலக பொது மறை என்று அழைக்கப்படுகிறது. தெய்வநூல், பொய்யாமொழி,தமிழ் மறை,முப்பால் என்று வேறு பெயர்களும் உண்டு.
இந்நூலை பாராட்டித் தோன்றியது திருவள்ளுவமாலை. இந்நூல் அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
திருக்குறளில் 133 அதிகாரமும், அதிகாரத்துக்கு 10 குறளும் மொத்தம் 1330 குறளும் அடங்கியுள்ளது. ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளையும் ஏழு சீரும் கொண்ட வெண்பாவாகும்.
இந்நூலில் பெரும் பிரிவு பால் எனவும்,சிறு பிரிவு இயல் எனவும், அதனினும் சிறியது அதிகாரம் என்று வகுக்க பெற்றுள்ளது.
அறத்துப்பால்-38 அதிகாரங்கள்
பொருட்பால்-70 அதிகாரங்கள்
காமத்துப்பால்-25 அதிகாரங்கள்