Once there lived a donkey, on an island. Whole day, it used to roam around here and there on the island. Getting too bored it planned to move to some were place. All his friends asked him not to go, but it didn′t pay any attention to their words.
Donkey went to another island. That island was full of green grass. Donkey made new friends over there. In a few days, he became fat.
One day, a farmer saw donkey and caught it. He took the donkey to his house. Now the donkey had to work hard the whole day. But the farmer didn′t even give it enough food to eat.
One day, the donkey got an opportunity and escaped from the farmer′s house. It went back to it′s old island and decided not to leave it′s friends again who had given him right advice.
ஒருமுறை ஒரு தீவில் கழுதை ஒன்று வசித்து வந்தது. நாள் முழுவதும், அது தீவில் இங்கும் அங்கும் சுற்றிக்கொண்டிருக்கும். மிகவும் சலிப்படைந்து எங்கையாவது புதிய இடத்திற்கு செல்ல திட்டமிட்டது. அதனுடைய நண்பர்கள் எல்லோரும் அவ்வாறு செல்ல வேண்டாம் என்று அதனிடம் கேட்டுக் கொண்டனர், ஆனால் அவர்கள் சொல்வதை கழுதை கவனிக்கவில்லை.
கழுதை மற்றொரு தீவுக்கு சென்றது. அந்த தீவு முழுவதும் பச்சை புல் நிறைந்திருந்தது. கழுதை அங்கு புதிய நண்பர்களை உருவாக்கிக் கொண்டது. ஒரு சில நாட்களில், அது குண்டாகிவிட்டது.
ஒரு நாள், ஒரு விவசாயி கழுதையைக் கண்டு அதை பிடித்துக் கொண்டார். கழுதையை தனது வீட்டிற்கு பிடித்துச் சென்றார். இப்போது கழுதை நாள் முழுவதும் கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. ஆனால் விவசாயி அதற்கு சாப்பிட போதுமான உணவை கூட கொடுக்கவில்லை.
ஒரு நாள், கழுதைக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தபோது விவசாயியின் வீட்டிலிருந்து தப்பி ஓடிவிட்டது. அது தன்னுடைய பழைய தீவுக்கு திரும்பிச் சென்றது, மற்றும் அதற்கு சரியான அறிவுரை கூறிய நண்பர்களை விட்டுச் செல்லக் கூடாது என்று முடிவு எடுத்தது.