மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Thursday 2 June 2022

பிஸ்கட்டால் உடலுக்கு என்னென்ன பிரச்சினைகள் வரும்?

குழந்தைகளுக்கு பிஸ்கட் என்றால் மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் இந்த பிஸ்கட்டுக்கள் நமது உடலுக்கு என்னென்ன பிரச்சனைகள் ஏற்படுத்தும் என்பது உங்களுக்கு தெரியுமா?


1. பிஸ்கெட் தயாரிப்பின் போது அதிக வெப்ப நிலையில் எண்ணெய், டால்டா போன்றவற்றை சூடுபடுத்தும் போது சில அமிலங்கள் உருவாகும். இந்த டிரான்ஸ்ஃபேட் அமிலங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கின்றன என்பதை அதன் உறையில் பெரும்பாலும் குறிப்பிடுவதில்லை. இந்த அமிலங்கள் உடலில் அதிகம் சேர்ந்தால் கொழுப்பின் அளவு அதிகமாகி இதயநோய்கள் உருவாகும் அபாயம் உண்டு.



2. பிஸ்கெட் கெட்டுப் போகாமல் இருப்பதற்காகவும் சுவைக்காகவும் உப்பை அதிகம் பயன்படுத்துகிறார்கள். உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள் இவற்றை சாப்பிடுவது தேவையற்ற விளைவுகளையே உண்டாக்கும். இதைவிட சுவை, நிறம், பதப்படுத்துதல் போன்ற காரணங்களுக்காகப் பயன்படுத்துகிற சில வேதிப்பொருட்கள் தடை செய்யப்பட்டவையாகவும் இருக்கலாம்.


3. பிஸ்கட் மிருதுவாக இருக்க குளூட்டன் சேர்க்கப்படுகிறது. பிஸ்கட்டின் வடிவத்துக்காகச் சர்க்கரை, சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ், ஈஸ்ட், சோடியம் பை கார்பனேட், நிறமிகள் போன்றவை சேர்க்கப்படுகின்றன. பிஸ்கட் எந்த அளவுக்கு மிருதுவாக உள்ளதோ, அந்த அளவுக்கு அதிகப் புரதச் சத்துகளைக் கொண்டது. மிருதுத்தன்மை குறைந்தால், கொழுப்புச்சத்தின் அளவு அதிகமிருக்கிறது என்று அர்த்தம்.


4. "அளவுக்கு மிஞ்சினால் அமுதாவும் நஞ்சு". எந்த ஒரு உணவு பொருளும் அளவுக்கு அதிகமாக நாம் எடுத்துக் கொள்ளும் போது நமக்கு தீய விளைவுகளையே ஏற்படுத்தும்.


5. குழந்தைகள் விரும்பி உண்ணும் பிஸ்கட்டுகளை வாங்கும்போது அதன் தரம் அறிந்து வாங்குவது நன்மை ஏற்படுத்தும். பெரும்பாலும் பிள்ளைகளுக்கு வீட்டில் தயாரித்த உணவுகளை உண்ண ஊக்கப்படுத்துங்கள். 



Pages