ஒரு குருவி இரை எடுக்க, ஒன்பது குருவி வாய் திறக்க !
நாம் அறிந்த விளக்கம் :
இரை தேடி வருவது ஒரு தாய்க் குருவிதான். அந்த இரைக்காக ஒன்பது குருவிக் குஞ்சுகள் வாயைத் திறக்கின்றன. இது நாம் அறிந்த விளக்கம் ஆகும்.
விளக்கம் :
நிறையக் குழந்தைகள் உள்ள குடும்பத்தின் தந்தை தன் ஊதியத்தால் தனக்கு ஒன்றும் பயனில்லையே என்று நொந்து கூறியது தான் இந்த பழமொழி. இதுவே இதன் உண்மை விளக்கம் ஆகும்.