மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Wednesday 3 April 2019

ஆப்ரகாம் லிங்கன் பள்ளி ஆசிரியருக்கு எழுதிய கடிதம்!!


👉ஆப்ரகாம் லிங்கன், தன் மகனை துவக்கப்பள்ளியில் சேர்த்தார். அவர் தன் மகனுக்கு அறிவுரை சொல்லவில்லை. அதற்கு பதிலாக அந்த பள்ளி ஆசிரியருக்கு கடிதம் ஒன்றை எழுதினார்.

🔹தோல்வியை ஏற்றுக்கொள்ளவும், வெற்றியைக் கொண்டாடவும்... என் மகனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

🔹பொறாமையிலிருந்து அவன் விலகியே இருக்கட்டும்.

🔹வானப்பறவைகள், தேனீக்கள், சூரியன், பசுமையான செடிகள், மலர்கள்... இவற்றை ரசிக்க அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

🔹பிறரை ஏமாற்றுவதை விட, தோற்பது கண்ணியம் என்று அவனுக்குக் கற்றுக்கொடுங்கள்.

🔹சுய சிந்தனையில் நம்பிக்கை கொள்ளச் சொல்லுங்கள்.

🔹மென்மையான வர்களிடம் மென்மையாகவும், உறுதியானவர் களிடம் உறுதியாகவும் நடந்து கொள்ளக் கற்றுக்கொடுங்கள்.

🔹குற்றம், குறை கூறுபவர்களை அவன் அலட்சியப் படுத்தட்டும். அளவுக்கு அதிகமாய் இனிமையாகப் பேசுபவர்களிடம் அவன் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

🔹தன் மனதுக்கு சரி என்று தோன்றுவதை அவன் துணிந்து நின்று போராடி நிறைவேற்ற அவனைப் பழக்குங்கள் என்று எழுதியிருந்தார்.

👉அவர் சொன்ன அந்த அறிவுரை எந்த காலத்திலும் பொருந்தும்.

Pages