மாணவர்களுக்கு கதைகள், பொது அறிவு தகவல்கள், யோகா, உடல்நலம், அறிஞர் வாழ்வில் என பல பயனுள்ள தகவல்களை நமது வலைத்தளத்தில் தெரிந்துகொள்ளலாம்.

Breaking

Sunday, 28 April 2019

இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்!! தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!


     தமிழக பள்ளிக்கல்வியின் சமச்சீர் பாடத்திட்டத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் 29-ம் தேதியுடன் முடிவடைந்தன. இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 9.97 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதியுள்ளனர்.

   இந்நிலையில் ஏற்கெனவே அறிவித்தபடி 10-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று ஏப்ரல் 29 காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன.

    தமிழக மாணவர்கள் மேலும் தங்கள் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள,


என்ற இணையதளப் பக்கத்தையும் காணலாம்.

     மேலும் எல்லா மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவல் மையங்கள் அனைத்து நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிய முடியும்.

தேர்வு முடிவுகளை அறிந்துகொள்வது எப்படி?

1. http://www.tnresults.nic.in என்ற இணையதள பக்கத்துச் செல்லவும்.

2. TN SSLC Result 2019, TamilNadu Result 2019 எனத் தேர்வு செய்யவும்.

3. தேர்வு பதிவு எண்ணை பதிவிடவும்.

4. பிறந்த தேதி பதிவிடவும்.

5. தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். தேவைப்பட்டால் பதிவிறக்கமும் செய்துகொள்ள முடியும்.

     இதையடுத்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மே 2-ம் தேதி முதல் தாங்கள் படித்த பள்ளி அல்லது தேர்வெழுதிய மையத்தின் தலைமையாசிரியர் மூலம் இணையத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம்.

     மாணவர்கள் மே 6-ம் தேதி முதல் www.dge.tn.nic.in இணையதளத்தில் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்யலாம்.

      மறுகூட்டலுக்கு பள்ளி மாணவர்கள் பள்ளிகள் மூலமும் தனித்தேர்வர்கள் தேர்வுமையங்கள் வழியாகவும் மே 2 முதல் 4 வரை விண்ணப்பிக்கலாம். மறுகூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடங்களுக்கு ரூ.305, மற்ற பாடங்களுக்கு ரூ.205 கட்டணம் செலுத்த வேண்டும் என தேர்வுத்துறை அதிகாரிகள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

Pages